உலகில் பல்வேறு நாடுகள், பல்வேறு ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இந்நிலையில் 2024இன் கணக்கின் படி விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள் /விண்கலம் எண்ணிக்கை 2900, விண்வெளி குப்பைகளின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்து உள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த 2024இல் 261 செயற்கைக்கோள் / விண்கலம், விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இதில் 254 வெற்றி பெற்றது. இதையடுத்து விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்/விண்கலம் எண்ணிக்கை 2900ஆக உயர்ந்தது.
ஒலியைவிட வேகமான ஜெட் விமானம்
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு 55 நிமிடத்துக்குள் செல்லும் திறனுடைய சூப்பர்சானிக் ஜெட் விமானத்தை, அமெரிக்காவின் வீனஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதற்கான செலவு ரூ. 282 கோடி. தற்போதைய பயணிகள் விமானங்கள் இந்த துாரத்தை கடப்பதற்கு எட்டு மணி நேரம் ஆகும். இது 2030இல் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் பயணிக்கலாம். இது 1.10 லட்சம் அடி உயரத்தில் (சாதாரண விமானம் 50 ஆயிரம் அடி) பறக்கும். இது ஒலியை விட நான்கு மடங்கு வேகத்தில் (மணிக்கு 4950 கி.மீ.,) செல்லும்.