டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் அடுத்தாண்டு அக்டோபரில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசு பதவி, நீதித்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும்: தலைமை நீதிபதி கவாய் கருத்து. ”எனவே, நானும் எனது சக நீதிபதிகள் பலரும் ஓய்வுக்குப் பிறகு எந்த அரசு பதவிகளையும் ஏற்க மாட்டோம் என்று பகிரங்கமாக உறுதி அளித்துள்ளோம். இது நீதித்துறையின் நம்பகத் தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சியாகும்”. இவ்வாறு நீதிபதி கவாய் கூறியுள்ளார்.
தி இந்து:
*தமிழ்நாட்டிற்கான மக்களவை இடங்களை குறைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக் கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஒன்றிய அரசு தெளிவான விளக்கம் அளித்தாக வேண்டும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி டெலிகிராப்:
* நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள மோடி அரசு பயப்படுகிறார். அவருக்கு ‘பார்லிமெண்டோபோபியா” உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ’பிரையன் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*‘‘இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை” என உரக்கச் சொல்லி, மக்களின் உணர்வுகளை கைத் தட்டல்களாகவும் – உங்களால் அதிகம் பகிரப்படும் காணொலியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன். இந்திய நாட்டுக்கான குரலாக தமிழ்நாட்டின் அன்பு மொழியை – ஒற்றுமை மொழியை பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்கிறேன்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.
– குடந்தை கருணா