பெரியார் உலகத்திற்கு கழக தோழர்களின் பங்களிப்பு அளிக்கப்படும் ஆவடி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

viduthalai
2 Min Read

ஆவடி, ஜூலை 4– ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்ட தீர்மானம் ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்  31.05.2025  சனிக்கிழமை மாலை 06-00 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையுடன் நடைபெற்றது. முதலில் கீழ்க்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

10-05-2025 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பிரச்சாரம் செய்தல்.

குறிப்பாக கடைசி தீர்மானமான  ‘பெரியார் உலகம்’ நமது இலக்கு நிர்ணயம் தீர்மானப்படி கவனச் சிதறல் இல்லாமல் ஆவடி மாவட்ட கழக தோழர்களின் குடும்பங்களின் முழு பங்களிப்பை பெற்று பெரியார் உலகத்திற்கு அளிப்பது.

தற்போது சென்னை தெருக்களில் உள்ள பெயர் பலகைகளில் உள்ள  தலைவர்களின் பெயரை மாற்றி புதிய பெயர்களை வைக்கும் பணி மிக வேகமாக நடைபெறுகிறது.குறிப்பாக ஜாதி பெயர்களில் உள்ள தெருக்களின் பெயரை மாற்ற  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே தலைமையின் அறிவுரைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவது.

விடுதலை சந்தா தனக்கு ஒன்று தன்னை சார்ந்தவர்க்கு ஒன்று என இலக்கு வைத்து சேர்ப்பது மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை விளக்கி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் உரையாற்றிய பின் ஆதரித்து மாவட்ட துணைத்தலைவர் மு.ரகுபதி, ஆவடி நகர தலைவர் கோ.முருகன்,திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ்,ஆவடி மாவட்ட இளைஞர் அணி தலைவர் வி.சோபன்பாபு, செயலாளர் சு.வெங்கடேசன், பெரியார் பெருந்தொண்டர் துரை.முத்துகிருட்டினன், ஆவடி புருசோத்தமன், மாநில மாணவர் கழக செயலாளர் செ.பெ.தொண்டறம், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி,மாவட்ட கழக மேனாள் செயலாளர் சிவகுமார்,  மாவட்ட செயலாளர் க.இளவரசன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் மாவட்ட கழக குடும்பங்களை சார்ந்த மாவட்ட மகளிர் அணி தலைவர் சி.ஜெயந்தி- மாவட்ட கழக மேனாள் செயலாளர் சிவகுமாரா ஆகியோரின் மகள் அன்புமணி (12ஆம் வகுப்பு  600/548) ஆவடி தேவி நகர் புருசோத்தமன்- சுந்தராம்பாள் மகன் கவின் (11 ம் வகுப்பு 500/324)  இருவருக்கும்  மாவட்ட கழகம் சார்பாக பாராட்டி பயனாடை அணிவித்து அன்பளிப்பு  வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

கூட்டத்தில்  பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன் பூவிருந்தவல்லி பகுதி கழக செயலாளர் மணிமாறன், திருநின்றவூர் பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் சிலம்பரசன், பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன்,ஆவடி நடராஜன்  H V F , மதுரவாயல் தங்க.சரவணன், சுந்தர்ராஜன், ப.வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயந்தி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *