மராட்டியத்தில் தந்தை பெரியார் ஆடம்பர திருமணம் வேண்டாம் மராத்தா சமூக தலைவர்கள் முடிவு

viduthalai
2 Min Read

புனே, மே 28  மகாராட்டிராவில் நடந்த திருமணங்களுக்கான நடத்தை விதி கூட்டத்தில், ‘திரும ணங்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும்; ஆடம்பர விழாக்கள் வேண்டவே வேண்டாம்’ என, முடிவு செய்யப் பட்டது.

மகாராட்டிராவில் பாஜக கூட்டணி பிரிவு தேசியவாத காங்கிரஸ்  மூத்த நிர்வாகி ராஜேந்திர ஹகவானே இல்லத் திருமணம் தேசியவாத காங்., தலைவரும், துணை முதலமைச்சருமான அஜித் பவார் முன்னிலையில், கடந்தாண்டு திருமணம் நடந்தது. ராஜேந்திர ஹகவானே  மருமகள் வைஷ்ணவி, வரதட்சணை கொடுமை காரணமாக கடந்த 16ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். , ராஜேந்திர ஹகவானே மற்றும் அவரது மகன் சுஷில் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். வரதட்சணை விவகாரத்தில் வைஷ்ணவி தற்கொலை செய்த சம்பவம் மராத்தா சமூகத் தலைவர்களிடையே புயலை கிளப்பியது.

‘ஆடம்பரமாக நடத்தப்படும் விழாக்களால் எந்த உபயோகமும் இல்லை’ என, மராத்தா சமூக தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக முடிவெடுக்கவும், திருமண நடத்தை விதிகளை ஏற்படுத்தவும் மகாராட்டிராவில் உள்ள மராத்தா சமூகத்தின் மூத்த தலைவர்கள்  ‘ஆடம்பர திருமணங்களைத் தவிர்த்து, எளிமையான திருமண நிகழ்வுகளை ஊக்குவிக்க வேண்டும். என்று முடிவெடுத்தனர்

இது குறித்து காங்.,கின் அரவிந்த் ஷிண்டே கூறுகையில், ”ஆடம்பர திருமணங்களால் உயிரிழப்பு ஏற்படுவது கவலையளிக்கிறது. எனவே, எளிய முறை திருமணங் களை ஆதரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. மருமகள்களை புறக்கணிக்கும் குடும்பங்களை சமூக ரீதியாக புறக்கணிக்க கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அத்தகைய குடும்பங் களுடன் யாரும் திருமண உறவை ஏற்படுத்தக்கூடாது.

”அப்போதுதான், வைஷ்ணவியின் மரணம் போன்ற சம் பவங்கள் நடக்காது. நடுத்தர வர்க்க குடும்பங்கள், பணக்காரர்களின் ஆடம்பர திருமண விழாக்களை பின்பற்றுகின்றன. ”இதன் விளைவாக கடன் உள்ளிட்ட நிதி நெருக்கடி ஏற்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகத்தினர் முன்வர வேண்டும்,” என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற பிற தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். இயற்றப்பட்ட தீர்மானங்களை மகாராட்டிரா அரசுக்கு அனுப்பி வைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தந்தை பெரியாரின் கொள் கைகள்  உலகமயமாகி வருவதை கண்கூடாக  பார்க்க முடிகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *