ஊற்றங்கரை, மே 25- கடந்த 11.05.2025 அன்று காலை 10 மணிக்கு,சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
அதில் இளைஞர்களின் இயக்க வேலைத்திட்டம் குறித்து ஏழு முக்கிய தீர்மானங்கள் இளைஞரணி துணைச் செயலாளர்களால் முன்மொழியப்பட்டன,அதனை நிறைவேற்றும் செயல்திட்டத்தில் 23-05-2025 அன்று மதியம் 12 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்ட,ஊற்றங்கரை அழகி ஸ்டுடியோவில் மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து இராஜேசன் தலைமையில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி,துணைத் தலைவர் வண்டி.ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக இரு.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை மாநில கலந்துரையாடல் கூட்டத்தின் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டியும்,இளைஞரணி இயக்கப்பணிகளும் மேலும் வேகப்படுத்திட வேண்டியும் கருத்துரை வழங்கினார்.