பேராசிரியர் ந.வெற்றியழகன் படத்திறப்பு

1 Min Read

பகுத்தறிவுப் புலவர் பேராசிரியர் ந.வெற்றியழகன் படத்திறப்பு 12.03.2025இல் ஆங்கரையில் மகள் தமிழ் மலர் இல்லத்தில் நடைபெற்றது. கழகத் தோழர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், தூய வளனார் கல்லூரி தமிழ் பேராசிரியர் நெடுஞ்செழியன் (ஓய்வு), வனத்துறை கோவிந்தராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். படத்திறப்பு விழா புள்ளம்பாடி கழக தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. திருச்சி குறள் மணி, பேராசிரியர் திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியம் ,லால்குடி ஒன்றிய செயலாளர் காட்டூர் மணிவாசகம் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக மாவட்ட காப்பாளர் ஆல்பர்ட் நிறைவுரையாற்றினார். வெற்றியழகன் மகள் தமிழ் மலர் நன்றி உரையாற்றினார். படத்திறப்பு நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ,1000/-தமிழ் மலர் நன்கொடை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *