பொதுமக்கள் நலன் கருதி ரேசன் கடைகளில் 2 மற்றும் 5 கிலோ சமையல் எரிவாயு உருளை விற்பனை தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க இந்த ஏற்பாட்டிற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி

viduthalai
3 Min Read

சென்னை, மே.18- ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ மற்றும் 5 கிலோ சமையல் எரிவாயு உருளைகள் கடந்த ஓர் ஆண்டில் ரூ.63 லட்சத்து 6 ஆயிரத் திற்கு விற்பனையாகி உள்ளது. இதனை அனைத்துப் பகுதி ரேசன் கடைகளிலும் பரவலாக்க வேண்டும் என்று பொது மக்கள் விரும்புகின்றனர்.

சிறிய சமையல் எரிவாயு உருளை

ரேசன் கடைகளில் 2 மற்றும் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண் டர்கள் விற்பனை செய்யப்பட்டதில் கடந்த ஓர் ஆண்டில் ரூ.63 லட் சத்து 6 ஆயிரத்திற்கு விற்பனை நடை பெற்றுள்ளது. சிறிய ரக சமையல் எரிவாயு உருளை விற்ப னையை பரவலாக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலன் கருதி 2 கிலோ மற் றும் 5 கிலோ அளவிலான சிறிய ரக சமையல் எரிவாயு உருளைகளை ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டது. அதன்படி, 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரேசன் கடைகளில் சிறிய ரக உருளை விற்பனை தொடங்கப்பட்டது.

முகவரி சான்று தேவையில்லை

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெரும்பாலான சிறப்பு அங்காடிகளிலும், குறிப்பிட்ட சில ரேசன் கடைகள் என சுமார் 800 கடைகளில் இந்த சிறிய ரக சமையல் எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர, சிறிய ரக எரிவாயு உருளைகள் தேவைப்படுபவர்கள் தமிழ்நாட்டில் எந்த ரேசன் கடையில் கேட்டாலும், ஓரிரு நாள்களில்  அருகில் உள்ள சமையல் எரிவாயு மய்யங்களில் இருந்து ரேசன்கடை விற்பனையாளர்கள் பெற்றுத் தருவார்கள் என்று கூட்டுற வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பொதுமக்கள் முகவரிச் சான்று கொடுக்க வேண்டியத் தேவையில்லை. தங்களின் ஆதார் அட்டை நகலை கொடுத்து ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ சமையல் எரிவாயு உருளையை முன்பணத்துடன் ரூ.947-க்கும், காலி உருளை கொடுத்து மாற்று எரிவாயு உருளை   பெறுவதற்கு ரூ.239-க்கும் பெற்றுக் கொள்ளலாம். இதே போன்று, 5 கிலோ சமையல் எரிவாயு உருளையை முன்பணத்துடன் ரூ.1,560க்கும், காலி எரிவாயு உருளையை கொடுத்து மாற்று உருளை (ரீபில் சிலிண்டர்) பெறுவதற்கு ரூ.562-க்கும் பெற்றுக் கொள்ளலாம் என ரேசன்கடை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

ரூ.63 லட்சத்துக்கு விற்பனை

கடந்த ஓர் ஆண்டில் ரூ.63 லட்சத்து 6 ஆயிரத்துக்கு சிறிய ரக சமையல் எரிவாயு உருளைகள் விற்பனையாகி உள்ளதாக கூட்டுறவுத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

வேலை நிமித்தமாக புலம் பெயர்ந்து வந்துள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் தனியாக தங்கி பணிபுரிபவர்களுக்கும், தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும், நீண்ட தூரம் லாரியில் பயணிப்பவர்களுக்கும், சுற்றுலா செல்பவர்களுக்கும் இந்த சிறிய ரக உருளைகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

எனவே, இந்த சிறிய ரக எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப் படும் சில கடை களில் அது நன்கு விற்பனையாகிறது என்று ரேசன் கடை விற்பனையாளர்கள் தெரி விக்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் இதுபோன்று சிறிய ரக உருளைகள் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படுவது தங்களுக்கு தெரியவே தெரியாது என்றும் பல ரேசன் கடை விற்பனையாளர்களும்,  பயனாளிகளும் தெரிவித்தனர்.

பரவலாக்க வேண்டும்

எனவே, இது போன்று மக்களுக்கு பயன் உள்ள இந்த சிறிய ரக உருளைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து அனைத்துப் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளிலும் அறிவிப்பு பலகைகளிலோ அல்லது துண்டு பிரசுரங்கள் மூலமாகவோ விளம்பரப்படுத்தி இந்த 2 கிலோ, 5 கிலோ சிறிய ரக சமையல் எரிவாயு உருளை விற்பனையை பரவலாக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *