20ஆம் தேதி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

viduthalai
2 Min Read
  1. தந்தை பெரியார் வாழ்க!
  2. அன்னை மணியம்மையார் வாழ்க!
  3. தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி வாழ்க!
  4. காப்போம்! காப்போம்!

சமூகநீதியைக் காப்போம்!

  1. காப்போம்! காப்போம்!

ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமையை

காப்போம்! காப்போம்!

  1. மீட்போம்! மீட்போம்!

ஒன்றிய அரசால் பறிக்கப்படும்

உரிமைகளை மீட்போம்!

  1. கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!

ஹிந்தியைத் திணிக்கும் பாஜக அரசைக்

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!

  1. திணிக்காதே திணிக்காதே!

ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும்

திணிக்காதே திணிக்காதே!

  1. ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்!

மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம்!

  1. திணிக்காதே திணிக்காதே!

தேசியக் கல்விக் கொள்கையை

திணிக்காதே திணிக்காதே!

  1. அனுமதியோம் அனுமதியோம்!

ஒன்றிய அரசின் ஹிந்தித் திணைப்பை

அனுமதியோம் அனுமதியோம்!

  1. கை வைக்காதே கை வைக்காதே!

இருமொழிக் கொள்கையில் கை வைக்காதே!

  1. சிதைக்காதே சிதைக்காதே!

இந்தியாவின் ஒற்றுமையை

சிதைக்காதே சிதைக்காதே!

  1. அனுமதியோம் அனுமதியோம்!

காவி கார்ப்பரேட் பாசிசத்தின்

ஹிந்தித் திணிப்பை அனுமதியோம்!

  1. தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்

காவிக் கொள்கையைத் திணிப்பதா?

தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்

தனியார் மயத்தை வளர்ப்பதா?

தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்

சமூகநீதியைப் பறிப்பதா?

  1. குலத் தொழில் செய்ய ஆசைகாட்டும்

விஸ்வகர்மா யோஜனா

பார்ப்பனியத்தை ஆள வைக்கும்

மனுதர்ம யோஜனா!

  1. அய்ந்தாம் எட்டாம் வகுப்புகளுக்குப்

பொதுத் தேர்வு கட்டாயமாம்!

பள்ளிக் கல்வியை முடித்த பின்னர்

குலத்தொழிலுக்குப் பட்டாவாம்!

  1. தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்

ஆர்.எஸ்.எஸ்.சின் கல்விக் கொள்கை

என்ன சொல்லுது? என்ன சொல்லுது?

சமஸ்கிருதத்துக்குச் சிம்மாசனம்

தமிழ்மொழிக்குச் சவாசனமாம்!

சமூகநீதிக்குச் சவக்குழியாம்!

ஸநாதனம் பற்றிப் பாடங்களாம்!

தனியார் மயம் – தாராள மயம்

கல்விக்கூடமெல்லாம் காவி மயம்!

அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா

நவயோதாக்களுக்கு கால்கோளாம்!

வானியல் இருந்த பாடத்திலே

ஜோதிடம் எல்லாம் இடம்பெறுமாம்!

வேதம், மந்திரம், பாராயணம்

மூடநம்பிக்கைகளுக்கு முடிசூட்டு!

இருபத்தியொன்றாம் நூற்றாண்டில்

இருபது நூற்றாண்டுகள் பின்னிழுப்பு!

தேவையில்லை தேவையில்லை

தேசியக் கல்விக் கொள்கை தேவையில்லை!

  1. கொண்டுவா கொண்டு வா!

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வா!

  1. நீட்டுக்கு எதிரான

மக்கள் தீர்ப்பை மிதிப்பதா?

சட்டமன்றம் நிறைவேற்றிய

சட்டத்தை ஏற்க மறுப்பதா?

  1. கல்வியை வணிகப் பொருளாக்கும்

‘நீட்’ தேர்வை ஒழித்துக் கட்டு!

காவியை நாட்டில் திணிக்கப் பார்க்கும்

பாஜகவே மூட்டை கட்டு!

  1. தகுதித் தேர்வு நடத்துவதற்கு

தகுதி உண்டா பிஜேபிக்கு?

எத்தனை மோசடி எத்தனை மோசடி?

‘நீட்’ நடத்துவதில் எத்தனை மோசடி!

ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது மோசடி!

  1. எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?

நீட் தேர்வுத் திணிப்பினால்

எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?

  1. பலி கொடுக்காதே பலி கொடுக்காதே!

மாணவர் வாழ்க்கையைப் பலி கொடுக்காதே!

கார்ப்பரேட் நலனுக்காகப் பலி கொடுக்காதே!

  1. எதிர்ப்போம் எதிர்ப்போம்!

ஹிந்தி திணிப்பை எந்த நாளும்

எதிர்ப்போம் எதிர்ப்போம்!

  1. போராடுவோம் போராடுவோம்!

நீட் ஒழியும் வரை போராடுவோம்!

  1. ஒழித்துக் கட்டுவோம் ஒழித்துக் கட்டுவோம்

தேசியக் கல்விக் கொள்கையை ஒழித்துக் கட்டுவோம்!

  1. போராடுவோம் வெற்றி பெறுவோம்!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *