ரூர்க்கி, மே 17 பாஜக ஆளும் மாநி லங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நிகழ்வு கள் மிக மோசமான அளவில் அதி கரித்து வருகின்றன. குறிப்பாக உத்த ரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பாலியல் வன்முறை சம்ப வங்களின் கூடாரங்களாக மாறியுள்ளன.
இந்நிலையில், இமயமலைச் சார லில் அமைந்துள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பாஜக வின் புஷ்கர் சிங் தாமி உள்ளார். அமித் ஷா – மோடிக்கு மிக நெருக்கமானவர். இவரது ஆட்சிக் காலத்தில் உத்த ராகண்ட் மாநிலம் பாதுகாப்பு என்ற சொல்லுக்குக் கூட அர்த்தம் இல்லாத நிலைமை உள்ளது.
இத்தகைய சூழலில் ரூர்க்கியில் உள்ள அரசு கல்லூரியில் 12 மாணவிகளை பாலி யல் வன்கொடுமை செய்ததாக 55 வயது உதவிப் பேராசிரியர் டாக்டர் ஆலிம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேர்வு நடைபெறும் சமயங்களில் ஆலிம் மாணவிகளிடம் பாலியல் சீண்டல், பாலியல் வன்முறைச் நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.