7.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* ஆட்சியை குறை சொல்ல முடியாததால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்; சமூக வலைத்தளங்களை பயன்படுத்துங்கள், தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* தனிப்பட்ட ஸ்டாலினை, திமுக அரசை பாராட்ட வேண்டாம்; தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தனித்துவத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
*நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு, மார்ச் 14 அன்று டில்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் ‘நம்பகத்தன்மை’ இருப்பதாகக் கண்டறிந்தது, நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி விலகுமாறு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வலியுறுத்தி உள்ளதாக தகவல்.
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்பு என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு என்கிறார் யோகேந்திர யாதவ்.
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராஞ்சி பொதுக் கூட்டத்தில் பேச்சு.
*இந்த ஆண்டு கடந்த 4ஆம் தேதி நடந்த நீட் தேர்விலும் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. போலி ஹால் டிக்கெட் தயாரித்து பீகாரில் நடந்த நீட் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திபூரில் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* பஹல்காம் சம்பவத்துக்கு இந்தியா பதிலடி; நள்ளிரவில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல்; இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
– குடந்தை கருணா