நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் அய்ந்து கருணை மனுக்களை அளித்தார்; பசுவை வழிபடவில்லை: நீதிமன்றத்தில் பேரனுக்குப் பேரன் வாக்குமூலம்: வினாயக் தாமோதர் சாவர்க்கரின் பேரனுக்குப் பேரனான சத்யகி சாவர்க்கர், புனேயில் உள்ள சிறப்பு நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜராகி பேசுகையில், சாவர்க்கர் ஆங்கிலேய அரசாங்கத்திடம் அய்ந்து கருணை மனுக்களை சமர்ப்பித்ததாகவும், இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேய நிர்வாகத்தில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்ததாகவும் தெரிவித்தார்.
தி இந்து:
* மே 4-க்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி கூட வாய்ப்பு: தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் மக்களவை விரிவாக்கம் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ள ‘மகளிர் இடஒதுக்கீடு’ குறித்த எதிர்காலச் செயல் திட்டங்களை வகுப்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
* ‘மோடி தத்துவம்’ குஜராத் பல்கலைக்கழகம் ஒன்றில் சமூகவியல் பாடத்திட்டத்தில் அறிமுகம் “மோடி தத்துவம்” (MODI TATTVA) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடப் பகுதி, அப்பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் இளங்கலை (BA) மற்றும் முதுகலை (MA) பட்டப்படிப்புகளின் கீழ் வரும் “தேசபக்தியின் சமூகவியல்” (SOCIOLOGY OF PATRIOTISM) எனும் பாடத்தாளின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (RSS) மற்றும் பிற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமைகள் குறித்த பாடத்திட்டங்களுடன் இணைத்து மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளது.
தி டெலிகிராப்:
* பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இழைக்கப்பட்ட ‘அவமதிப்பு’: ராகுல் கண்டனம். குஜராத் பாஜக தலைவர் விஸ்வகர் வியாழக்கிழமையன்று பனஸ் கந்தாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசுகையில், “தாகோர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சேலைத் தலைப்பில் இருந்து (PALLO) விடுவித்து, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டை பாஜக கைப்பற்றியுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பாஜகவை கடுமையாக சாடிய ராகுல் காந்தி; ‘நாரி வந்தனா முகமூடி கிழிந்தது’ என விமர்சனம்
– குடந்தை கருணா
