கிருட்டினகிரி வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி – நினைவேந்தல் – படத்திறப்பு கழகத் துணைத் தலைவர் கவிஞர் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்

viduthalai
5 Min Read

கிருட்டினகிரி, ஏப்.23- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் பொதுக்குழு உறுப்பினரும் மேனாள் நகரத் தலைவருமான பெரியார் பெருந்தொண்டர்  கழக காப்பாளர்  சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி பி.ஏ. பி.எல்., ஆசிரியை அவர்கள் கடந்த 11/04/2025- வெள்ளிக்கிழமை   இயற்கை எய்தினார். அவரது நினைவேந்தல்-படத்திறப்பு நிகழ்ச்சி 20/04/2025 ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

சுயமரியாதைச் சுடரொளி என்.எஸ். பிரபாவதி  நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி  கிருட்டினகிரி வெல்கம் மகாலில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கலந்துக்கொண்டு சுயமரியாதைச் சுடரொளி என்.எஸ். பிரபாவதி அவர்களின் படத்தினை திறந்துவைத்து அவரது கழகப் பணிகளை எடுத்துக் கூறியும் ஒருவர் மறைவிற்கு பிறகு மறுபிறப்பு, நரகம், பிதிர்லோகம், தட்சனை என்ற மோசடி பித்தலாட்டங்களை விளக்கியும், பிரபாவதி அவர்கள் தந்தை பெரியாரால் ஈர்க்கப்பட்டவர். அவரை நான் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நன்கு அறிந்தவன். ஒரே இயக்கம் ஒரே கொள்கை ஒரே தலைமை என்ற உறுதியுடன் வாழ்ந்தவர் பெரியார் தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள் என்பதை நினைவுக் கூர்ந்து. பிறப்பு-இறப்பு என்பது மனித இயல்பு பிறந்த பின்பு வாழும் வாழ்க்கை என்பது வரலாறாக தந்தை பெரியாரின் மனித நேய இலட்சிய கொள்கையோடு, ஒழுக்கம் நாணயம் மிக்கவராக வாழ்ந்தவர். அவருக்கு திராவிடர் கழக தலைமைக் கழகம் சார்பில் வீரவணக்கத்தையும் தெரிவித்து  நினைவேந்தல் நிறைவுரையாற்றினார். மேலும் அவர்  பேசியதாவது; கிருட்டினகிரியில் பெரியார் மய்யம் உருவாக்கப்பட்டதின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும் பெரியார் மய்யத்தில் தொடர் மாதாந்திர வாசகர் வட்ட கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் படிப்பகம் நூலகம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவேண்டும் என்பதையும் எடுத்துக் கூறிப் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரிமாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.

மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ.நாராயணமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட ப.க.தலைவர் கிருட்டினன், நகரத் தலைவர் கோ.தங்கராசன், நகரச் செயலாளர் அ.கோ. இராசா ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நினைவேந்தல்   உரையாற்றிவர்கள்

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில ப.க. துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவனண்,  திமுக  மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கியணி துணை அமைப்பாளர் கிரி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட  கழகத்  தலைவர்கள் ஓசூர் சு.வனவேந்தன், அரூர் அ.தமிழ்ச்செல்வன், சேலம் இரா.வீரமணி இராஜி, மாவட்ட கழகச் செயலாளர்கள் தருமபுரி பீம.தமிழ் பிரபாகரன், திருப்பத்தூர் பெ.கலைவாணன், சேலம் சி.பூபதி, மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், மேனாள் மாவட்டத் தலைவர் பெ.மதிமணியன்,பொதுக்குழு உறுப்பினர்கள் க. கதிர், அ.செ.செல்வம், இரபிக் அகமது, காதி சர்வோதய மேலாளர் கிருட்டினமூர்த்தி ஆகியோர் அம்மாவின் இயக்கப் பணிகளை நினைவுக் கூர்ந்துப் பேசினர். நிறைவாக  திராவிடர் தொழிலாளரணி மாவட்ட நிர்வாகி செ.ப.மூர்த்தி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தூர் கி.முருகேசன், காவேரிப்பட்டணம் இல. ஆறுமுகம், திருப்பத்தூர் இரா.பெ. கனகராஜ், சோலையார்பேட்டை இராசேந்திரன், கிருட்டினகிரி மாவட்ட ப.க. செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட ப.க.துணைச் செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, தருமபுரி மாவட்ட மேனாள் தலைவர் இ.மாதன், விவசாயணி மாவட்ட தலைவர் மு.சிசுபாலன், மாவட்ட ப.க.செயலாளர் இர. கிருட்டினமூர்த்தி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சின்னராஜி,பாப்பாரப்பட்டி நரச்சிம்மன், காமலாபுரம் இரா.இராசா, திருப்பத்தூர் மாவட்ட ப.க. செயலாளர் கோ.திருப்பதி, நகர தலைவர் ஏடிஜி. சித்தார்த்தன், ஓசூர் மாவட்ட மகளிரணி தலைவர் செ.செல்வி, ஒன்றியத் தலைவர்கள் கிருட்டினகிரி த.மாது, காவேரிப்பட்டணம் பெ.செல்வம், மத்தூர் சா.தனஞ்செயன், பர்கூர் மே.மாரப்பன், ஒன்றியச் செயலாளர் கி.வேலன், சென்னை க.கலைமணி, ஆவடி இரவிந்திரன்,மக்கள் அதிகாரம் அகரம் நா.சதீஷ்குமார், சி.அஞ்சலி, செ.கலையரசி, மு.புலிக்கொடி,  தி.அ. அனலரசு, தி.அ. அறிவுக்கனல், மூ.த. சங்கத்தமிழ், மா.அறிவுச்செல்வன், மா அன்புச் செல்வன், பிரபாவதி அம்மாவின் குடும்ப உறவுகள் காஞ்சனா, ஜான்சி, அறிவழகன், ஜி.எச்.கோ. மதிபிரகாஷ் உள்பட கழதத் தோழர்கள் மற்றும் ஊற்றார் உறவினர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். இறுதியில் இரண்டு மணித் துளிகள் அனைவரும் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பேசும்போது தெரிவித்த கருத்தின் அடிப்படையில் கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் தொடர் மாதாந்திர வாசகர் வட்ட கூட்டங்களை நடத்த வேண்டும் என்று அறிவித்த அறிவிப்பிற்கிணங்க பகுத்தறிவாளர் கழக மாநில துணைப்பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் பெரியார் மய்யத்தில் தொடர் மாதாந்திர வாசகர் வட்ட கூட்டம் நடத்த பகுத்தறிவாளர் கழகம் சார்பில் முதலாவதாக  கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்களிடம் ரூ1000- நன்கொடை வழங்கி தொடங்கிவைத்தார். தொடர்ந்து மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி – ஊமை செயராமன் ரூ1000/-, திமுக மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கியணி துணை அமைப்பாளர் கிரி ரூ1000/-, சேலம் மாவட்டத் தலைவர் இரா.வீரமணி ராஜி ரூ1000/-, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் ரூ1000/-, ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் ரூ 500, பகுத்தறிவு கலைத்துறை மாநில செயலாளர் மாரி. கருணாநிதி 500/-, ஜெகதேவி மூ.த. சங்க தமிழ் ரூ 500/-, மத்தூர் கி.முருகேசன் ரூ500/-, காவேரிப்பட்டணம் பூ. இராசேந்திரபாபு ரூ500/-, பிரபாவதி பேரன் எச்.ஆர்.அறிவழகன் ரூ 500/-, பிரபாவதியின் உறவினர் வீ.சீனிவாசன் ரூ 500/- மற்றும் ஒருவர் ரூ 500/- ஆகியோர்   கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் வாசகர் வட்ட மாதாந்திரக் கூட்ட நடத்திட கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்களிடம்  மொத்தமாக ரூ9000/-நன்கொடை வழங்கினர். அதனை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் விடுதலை வாசகர் வட்டத் தலைவரிடம் ஒப்படைக்க மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோரிடம் வழங்கினார். படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வுகளை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாட்டிலும், மதியம் அனைவருக்கும் அசைவ உணவு பிரபாவதி அம்மா அவர்களின் உறவினர் ஏற்பாட்டிலும் சிறப்பாக செய்யப்பட்டிருந்து. நீண்டகாலமாக பிரபாவதி அம்மா அவர்களை பாதுகாத்துவந்த தனது அக்காவின் மகள் ஜான்சிக்கும், பேரன் அரி(எ) அறிவழகனுக்கும் கழகத்துணைத்தலைவர் கவிஞர் சால்வை அணிவித்து சிறப்பித்தார். பிரபாவதியின் தங்கை குடியாத்தம் காஞ்சனா கழகத்துணைத்தலைவருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *