புதுடில்லி, ஏப்.19 ஒன்றிய அரசு ஜி.பி.எஸ். மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவது குறித்து விளக்கம் அளித்துள்ளது. ஒன்றிய அரசு நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடி களிலும் ஜிபிஎஸ் அடிப் படையிலான கட்டண வசூலை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முறை வரும் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒன்றிய அரசு செயற் கைக்கோள் அடிப்படை யிலான சுங்க கட்டண வசூல் நடை முறை குறித்து /விளக்கம் அளித்துள்ளது.
”செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒன்றிய சாலை போக் குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணைய மும் எந்த முடிவும் எடுக்கவில்லை”தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் மட்டும் ANPR-FASTag-அடிப்படையிலான தடையற்ற கட்டண நடைமுறை இருக்கும். என விளக்கம் அளிக்கப்பட் டுள்ளது.