அசல் காட்டுமிராண்டித்தனம் இல்லையா?

Viduthalai
2 Min Read

 கருஞ்சட்டை

கேள்வி: பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது மூடநம்பிக்கை இல்லையா? இதை எப்படி உயர்நீதிமன்றம் அனுமதித்தது?
பதில்: அலகு குத்துவது, தீ மிதிப்பது, மொஹ ரம் ஊர்வலத்தில் சங்கிலி, சாட்டையால் ரத்தம் பீரிட அடித்துக் கொள்வது பகுத்த றிவு, பக்தர்கள் எச்சில் இலையில் அங்கப்பிர தட்சணம் செய்வது மூடத்தனம் என்று எப்படி உயர்நீதிமன்றம் கூறும்?
‘துக்ளக்’, 16.4.2025, பக்கம் 13

நமது பதிலடி!
பகுத்தறிவு என்றாலே பித்தலாட்டம் (‘துக்ளக்’, 4.3.2009) என்று கூறும் பகுத்தறிவற்ற கும்பலிலிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
நீ ஏண்டா பெயிலானாய்? என்று கேட்டால், பக்கத்து வீட்டுக்காரன் பக்கிரிசாமி பெயிலாகி விட்டான் என்று சொல்வதுதான் பார்ப்பனர்களின் வரலாறு.
இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்; தீ மிதிப்பது, அலகு குத்துவது என்பதை எல்லாம் பகுத்தறிவு என்று யார் சொன்னது?
பண்ணாரியம்மன் கோவிலில் தீ மிதிப்பதை எல்லாம் குருமூர்த்தி அய்யர் கேலி செய்கிறார்; அக்கோவிலின் பக்தர்கள்தான் இதுகுறித்து சிந்திக்கவேண்டும்.

கேவலம், எச்சில் இலையில் பக்தர்கள் உருளு வதற்கு வக்காலத்து வாங்குகிறது ‘துக்ளக்‘ கூட்டம் என்றால், பக்தியின் பெயரால் எந்தக் கேவலத்துக்கும் செல்லக்கூடிய ஜந்துக்கள் இவர்கள் என்று தெரிய வில்லையா?
‘‘மாட்டு மூத்திரத்தை குடியுங்கள் – நோய்கள் தீரும்’’ என்று சொல்லுவதற்கு அய்.அய்.டி.யில் படித்து டாக்டரேட் பட்டம் வாங்கவேண்டும்.
எச்சில் இலையில் எவ்வளவுக் கிருமியிருக்கும்; அதில் உருளுவதற்குப் பச்சைக் கொடி காட்டுகிறவர்கள் – மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டாமா?
எந்தப் பார்ப்பனப் பெண் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்?

உடலில் சீக்கு வந்தால், சங்கராச்சாரியார் மாட்டு மூத்திரம் குடிப்பாரா? குருமூர்த்தி அய்யரும், அவர் கூறும் அந்த ‘மகானோடு’ சேர்ந்து ஒரு கிளாஸ் அடிப்பாரா?
மகாசிவராத்திரி என்ற பெயரால் சுடுகாட்டுக்குப் போய், அங்கு கிடக்கும் எலும்புகளைக் கடித்துக் குதறுவதைப் பக்தியின் பெயரால் ஏற்கவேண்டுமா?
தந்தை பெரியார் ஒரு கேள்வி கேட்டார்:
“புலித்தோல் அரைக்கு இசைத்து
வெள்ளெருக்கம்பூ சடைக்கு முடிந்து
சுடலைப் பொடி பூசி
கொன்றைப் பூச்சூடி
தும்பை மாலை அணிந்து
மண்டை ஓடு கையேந்தி
எலும்பு வடம் தாங்கி
மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து
கோவண ஆண்டியாய் விடை (மாடு) ஏறி
ஒரு காலைத் தூக்கிக்கொண்டு
பேயோடு ஆடுகிறவன்…
காட்டுமிராண்டியாய் இல்லாமல்
நகரவாசி, நாகரிகக்காரனாக
இருக்க முடியுமா?
இவன்தான் சிவனா?’’
(‘விடுதலை’, 18.7.1956)
என்று தந்தை பெரியார் கேட்டாரே, ‘துக்ளக்’ கூட்டம் பதில் சொல்லுமா?

 

அகோரி பூஜை என்கிறார்களே, அது என்ன?
இறந்தவரின் உடல்மீது அமர்ந்து அகோரி நடத்திய பூஜை.
திருச்சி அருகே அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையோரம் ஜெய் அகோர காளி கோவிலில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து ‘தினத்தந்தி‘யில் (3.10.2018, பக்கம் 8) ஒரு செய்தி வெளியானது.
சுடுகாட்டில் இறந்தவர்கள்மீது அமர்ந்து அகோரி நடத்திய பூஜை தொடர்பான செய்திதான் அது. அவ்வாறு செய்தால், இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையுமாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *