தனியார் கல்வி நிறுவனங்களிலும் தேவை இட ஒதுக்கீடு சட்டம் காங்கிரஸ் வலியுறுத்தல்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப்.1 சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறப்பு சலுகை
இது தொடர்பாக காங்கிரஸ் பொது செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் எம்பி விடுத்துள்ள அறிக்கை: கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு அரசியல் சட்டத் தின் 15(5) பிரிவை அமல்படுத்துவதற்கு சட்டம் இயற்ற அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அரசியல் சட்டம் 15(5) பிரிவு சிறுபான்மையினர் அல்லாத கல்வி நிறுவ னங்களில் தாழ்த்தப் பட்டோர் பழங்குடிகள்,பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தொடர்பான சிறப்பு சலுகைக்கு அனுமதி அளிக்கிறது.

கடந்த மக்களவை தேர்தலின் போது, அரசி யல் சட்டம் 15(5) பிரிவை அமுல்படுத்துவதற்கு காங்கிரஸ் உறுதி அளித் திருந்தது. மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இடஒதுக் கீடு) சட்டம்,கடந்த 2006 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மத்திய கல்வி நிறு வனங்களில் தாழ்த்தப் பட்டோர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஜனவரி 3, 2007 முதல் அறிமுகப்படுத் தப்பட்டது. இதை எதிர்த்து அசோக்குமார் தாக்குர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இடஒதுக்கீடு
இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செல்லு படியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி யார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக தகுந்த நேரத்தில் முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதன் பொருள், தனியார் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான இடஒதுக்கீடு அரசமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *