நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் உள்ள அலைபேசி எண்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ‘யுபிஅய்’ செயல்படாது: என்.பி.சி.அய் அறிவிப்பு!

2 Min Read

சென்னை, மார்ச் 27- கூகுள் பே, போன் பே போன்ற யுபிஅய் செயலிகள் அலைபேசி எண்ணை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன. இந்த நிலையில், யுபிஅய் விதிகளில் சில முக்கிய மாற்றங்களை NPCI கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் வரும் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறையால் சிலருக்கு யுபிஅய் சேவை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. எந்த மாதிரி எண்களை வைத்து இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
யுபிஅய் சேவையை பயன்படுத்தாதவர்களை இப்போது விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் யுபிஅய் பயன்பாடு அதிகரித்துள்ளது. கையில் ஒரு பைசா ரொக்கமாக கொண்டு செல்லாமல், பெட்டிக் கடை முதல் வணிக வளாகம் முதல் நினைத்ததை தற்போது யுபிஅய் செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட இந்த யுபிஅய் மூலமாக பணப்பரிமாற்றம் எளிதாக இருப்பதால், பொதுமக்களும் அதிக அளவில் இதை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாற்றம்

பயனர்களின் பாதுகாப்பு கருதி யுபிஅய் விதிகளில் அவ்வப்போது சில அப்டேட்களையும் விதிகளில் மாற்றங்களையும் என்பிசிஅய் எனப்படும் தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், யுபிஅய்- அலைபேசி எண் தொடர்பாக சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இதன்படி, வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி குறிபிட்ட சில அலைபேசி எண்களுக்கு யுபிஅய் செயல்படாமல் போகலாம். இது குறித்த விவரங்கள் வருமாறு:-
செயல்படாமல் உள்ள அலைபேசி எண்களுடன் யுபிஅய் இணைக்கப்பட்டு இருப்பது மோசடிகளுக்கு வழி வகுப்பதாக உள்ளது. பயனர்கள் தங்கள் அலைபேசி எண்ணை மாற்றினாலோ அல்லது டி ஆக்டிவேட் செய்யும் போது கூட அவர்களின் யுபிஅய் கணக்கு ஆக்டிவாக இருக்கும். இது மோசடிகளுக்கு வழி வகுப்பதாக உள்ளது. இந்த எண்கள் வேறு யாருக்கும் ஒதுக்கப்பட்டால் மோசடி நபர்கள் நிதி பரிவர்த்தனைகளை செய்யும் அபாயம் உள்ளது.
எனவே இவற்றை தடுக்க வங்கிகளும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் செயல்படாமல் உள்ள அலைபேசி எண்களை யுபிஅய் கணக்கில் இருந்து நீக்க தொடங்கியுள்ளது. என்பிசிஅய் விதிகளின்படி இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *