புதுடில்லி, மார்ச் 22- டில்லியில் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வாலைச் சந்தித்து மகாபோதி கோயிலை ஹிந்து மதவாதிகளின் பிடியில் இருந்து விடுவித்து புத்த சமூகத்திற்கு திரும்ப ஒப்படைக்க வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவள வன், விழுப்புரம் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச்செயலாளருமான து.ரவிக் குமார் இருவரும் கோரிக்கை மனு அளித்தனர்.
புத்தகயாவை பவுத்த சமயத்த வர்களிடம் முழுமையாக ஒப்படைக் கக் கோரி அளிக்கப்பட்ட மனுவில், இந்திய நாட்டின் செழுமையான கலாச்சாரச் மற்றும் பாரம்பரியம் மிக்க பகுதி இன்று அபகரிக்கும் சூழலுக்கு ஆளாகி உள்ளது. இந்த கவலைக்குரிய முக்கியப் பிரச் சினையை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் கட்டப்பட்ட மகாபோதி விகாரை, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புத்த மதம் மற்றும் அதன்செழுமையான பாரம்பரியத்தின் சின்னமாக திகழ்கிறது.
2,500 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம புத்தர் புத்தறிவு பெற்ற புனித தலமாகும்.
1949ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட புத்தகயா விகாரை சட்டத்தை ரத்து செய்து, அபகரிப்பிற்கு உள்ளாகி இருக்கும் இம்முக்கியத்துவம் வாய்ந்த விகாரையை புத்த சமூகத்திற்கு மீண்டும் தருவதற்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போதைய சட்டம் கோயிலை புத்தர் அல்லாத வர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, புத்த மத விவகாரங்களில் அரசின் தேவையற்ற தலையீட்டிற்கு ஆளாகிறது.
இந்தியா முழுவதும் உள்ள புத்த சமூகங்கள் போராட்டங்களில் பங்கேற்று தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன. புத்த மதத்தின் மிகவும் முக்கிய தலங் களில் ஒன்றான பீகாரின் புத்த கயாவில், குஜராத், அரியானா, மகாராட்டிரா, லடாக் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளனர்.
புத்த துறவிகள்
பட்டினிப் போராட்டம்
பிப்ரவரி 12 முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பவுத்த துறவிகளுக்கு 500க்கும் மேற்பட்ட அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன., அமெரிக்கா, கனடா, வங்காளதேசம், தாய்லாந்து, லாவோஸ், இலங்கை, தைவான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள புத்த சமூகங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
மகாபோதி மகாவிகாரை புத்த சமூகத்தின் பாதுகாப்பில் மீண்டும் கொண்டுவருவதற்கான போராட்டம் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது. 1891ஆம் ஆண்டில், இலங்கை புத்த சீர்திருத்தவாதி அனகாரிக தர்மபால, ஜப்பானிய தோழரான பிக்கு கோஜுனுடன் சேர்ந்து, கோயிலின் நிலையால் ஆழமாக பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் மகாபோதி சங்கத்தை நிறுவி பவுத்தம் தொடர்பான பரப்புரை களைத் தொடங்கினார். அவ ரது வாழ்நாள் போராட்டம் விகா ரையை புத்தமதத்தவர்களிடம் ஒப் படைப்பதற்கான கோரிக்கைகளுக்கு அடித்தளமிட்டது.
1942இல், கயாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத் தில், ராகுல் ‘சாங்கிருத்யாயன் மகாபோதி மகாவிகாரை’ புத்த சமூகத்திற்கு மீட்டளிக்க வேண்டும் என்று முறையாக கோரிக்கை வைத்தார். அவரது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டபோது, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவியிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார்.
காந்தியார் அளித்த உறுதிமொழி
பின்னர், இந்த பிரச்சினை காந்தியாரிடம் சென்றபோது, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கோயில் புத்த மதத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இருப்பினும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 1949இல், பீகார் அரசு போத்கயா கோயில் சட்டத்தை இயற்றியது, இது பெரும்பாலும் இந்து சமூகத்த வர்களைக் கொண்ட ஒரு மேலாண்மை குழுவை உருவாக்கி, புத்த சமூகத்தை ஓரங்கட்டியது இந்த முடிவு தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது.
புத்த கயாவில் நடைபெற்று வரும் காலவரையற்ற போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் அவர்களிடம் பின்வரும் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்:
1. மகாபோதி கோயிலின் நிர்வாகத்தை புத்த சமூகத்திடம் மாற்றுதல்
2. போத்கயா கோயில் சட்டம், 1949அய் திருத்தி, கோயில் நிர்வாகக் குழு புத்த உறுப்பினர்களால் மட்டுமே அமைக்கப்படுவதை உறுதி செய்தல்
3. மகாபோதி கோயில் வளாகத் திற்குள் புத்த மதம் அல்லாத மத சடங்குகளை நடத்துவதை தடுத்தல் என இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது பாரம்பரிய உரிமைகளை நிலைநிறுத்தவும், புத்த சமூகத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை மதித்து நடப்பது தேவையானது என்று தாங்கள் நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கொடுத்த கோரிக்கையை அமைச்சர் விரைவாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.