புதுடில்லி, மார்ச் 18 நாடாளுமன்ற தி.முக.. உறுப்பினர் கனிமொழி திறன் செயல் பாட்டு திட்டத்தால் தமிழ்நாடு அடைந்த பயன் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார்.
கனிமொழி எழுத்துபூர்வ மாக எழுப்புள்ள கேள்வி வருமாறு:
பயிற்சியாளர் எண்ணிக்கை எவ்வளவு?
‘‘ஒன்றிய அரசின் திறன் இந்தியா மிஷன் என்ற இயக்கத்தில் வரும் திட்டங்களின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக என்ன? குறிப் பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் எண் ணிக்கை எவ்வளவு? தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக, குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வளவு?
இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெற் றவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் என்ன? பிரவாசி கவுஷல் விகாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற வர்களின் எண்ணிக்கை மற்றும் மாவட்ட வாரியாக, குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வளவு?” என்று கேள்வி எழுப்பினார்.
ஒன்றிய இணை அமைச்சரின் பதில்
இதற்கு ஒன்றிய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறை யின் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜெயந்த் சவுத்ரி, ‘‘ஒன்றிய அரசின், ‘திறன் இந்தியா மிஷன்’ என்ற திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE), திறன் மேம்பாட்டுப் பயிற்சி யையும், மறு திறன் மேம்பாட்டுப் பயிற்சி களையும், உயர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி களையும் வழங்குகிறது.
இதற்காக பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா (PMKVY), ஜன் சிக்ஷான் சன்ஸ்தான் (JSS), தேசிய தொழில்பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIs) மூலம் கைவினைஞர் பயிற்சி திட்டம் (CTS) என பல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும். இந்த திட்டங்களின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தி யாவின் இளைஞர்கள் எதிர் காலத்தில் தொழில் துறைக்கு ஏற்ற திறன் களுடன் தயாரா வதை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட 2015 முதல் கடந்த 2024 வரை தமிழ்நாட்டில் 8 லட்சத்து 68 ஆயிரத்து 443 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்து 870 பேர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஜன் சிக்ஷான் சன்ஸ்தான் திட்டத்தின் கீழ் 2018 முதல் 2025 பிப்ரவரி வரை தமிழ்நாட்டில் 87 ஆயிரத்து 449 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எவரு மில்லை.
தேசிய தொழில் பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 2018-19 முதல் பிப்ரவரி 2025 வரை தமிழ்நாட்டில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 439 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் 1157 பேர் தூத் துக்குடி மாவட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
தொழில் பயிற்சி நிறு வனங்கள் (ITI) வழியாக தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 15 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 17 பேர் பயிற்சி பெற்றிருக்கின்றனர். திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறையின் திட்டங்களில், 2015-16 முதல் 2021-22 வரை செயல்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் முதல் மூன்று பயிற்சித் திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் பெற்றவர்களின் எண்ணிக்கை கண்டறியப் பட்டது.
அதன்படி நாடு முழுதும் 24 லட்சத்து 43 ஆயிரத்து 672 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அதேபோல தமிழ்நாட்டில் இந்த பயிற்சிகளின் மூலமாக 1 லட்சத்து 72 ஆயிரத்து 336 பேர் பணியமர்த்தப ்பட்டுள்ளனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 182 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
PMKVY 4.0 இன் கீழ் பயிற்சி பெற்றவர்கள் மாறுபட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பாதையை தேர்ந்தெடுப்பதற்க்கு இப்போது கவனம் செலுத் தப்பட்டு வருகிறது என்று பதிலளித்தார்.