வடலூர் திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் கழக பொதுக்குழு உறுப்பினர் ரமா பிரபா ஜோசப் ஒருங்கிணைப்பில் உலக மகளிர் உரிமை நாள் பிரபா அழகு நிலையத்தில் நடைபெற்றது. மகளிர் உரிமை குறித்தும் தந்தை பெரியார் பெண்ணுரிமை பேணிய வித்தகம் பற்றியும் விளக்கி கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், கழக அமைப்பாளர் முருகன் உரையாற்றினர். பங்கேற்ற மகளிர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது (8.3.2025).