கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

20.2.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* மூடா நில முறைகேடு வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா விசாரணை அறிக்கை.
* இந்தியாவுக்கு எந்தவித வரிச் சலுகையும் தர முடியாது, மோடியின் கோரிக்கையை டிரம்ப் நிராகரித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* பிரயாக்ராஜில் (அலகாபாத்) உள்ள கங்கை நதியில் உள்ள மலக் கோலிஃபார்ம் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் போன்ற பிற நீர் தர அளவுருக்கள் குறித்த போதுமான விவரங்களை சமர்ப்பிக்காததற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB) மற்றும் உத்தரப் பிரதேச அரசை கண்டித்துள்ளது.
* உத்தரகாண்டின் 13 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் வெளியாட்கள் விவசாய நிலங்களை வாங்க முடியாது: ‘வளங்கள், கலாச்சாரத்தை பாதுகாக்க’ புதிய வரைவுச் சட்டத்திற்கு மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது, (காஷ்மீரில் இருந்த இந்த 370 சட்டம் பாஜகவால் ரத்து செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது)
* பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் உள்ள கங்கை நீர், குளிப்பதற்கு பாதுகாப்பற்றது, அரசு அறிக்கை. அரசாங்க தரவுகளின்படி, நீரின் தரத்தை நிர்ணயிப்பதற்கான ஒரு முக்கிய அளவுருவான உயிரியல் ஆக்ஸிஜன் தேவைக்கான (BOD) பரிந்துரைக்கப்பட்ட வரம்பை மீறி உள்ளது தான் காரணம்.
* தேர்தல் ஆணையர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. நேரமின்மை காரணமாக ஹோலி பண்டிகை இடைவேளைக்குப் பிறகு இந்த வழக்கு பட்டியலிடப்படும் என அறிவிப்பு.
தி இந்து
* ‘இரட்டை எஞ்சின் அரசாங்கம் பீகாருக்கு இரட்டை பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது’, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா கண்டனம்.
* அயப்பாக்கம் பெண்கள் கோலங்கள் வரைந்து ஹிந்தி எதிர்ப்பைப் பதிவிட்டனர். “மறக்காதே! மத்திய அரசே, 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மறந்துவிடாதீர்கள்” என கோலத்தில் எழுதப்பட்டுள்ளது:
டைம்ஸ் ஆப் இந்தியா
* பாஜகவால் ‘பெரிய அளவிலான வாக்காளர் பட்டியலில் மோசடி’ நடந்ததாக கார்கே குற்றச்சாட்டு.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *