வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த வழக்கில் புதிய மனுக்களை ஏற்க முடியாது உச்சநீதிமன்றம் அறிவிப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.18 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித் துள்ளது.

மத வழிபாட்டு தலங்கள் சட்டம்

மேனாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டு மத வழி பாட்டுத் தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947-ஆம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள்மீது யாரும் உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத் யாயா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். மத வழிபாட்டு தலங்கள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மதுரா ஷாயி ஈத்கா மசூதி கமிட்டி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அமைப்பு, கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனி டையே மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியதாவது:

புதிய மனுக்களை ஏற்க முடியாது
மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பாக ஏராளமான மனுக்கள் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சட்டம் தொடர்பாக இனிமேலும் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம். புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது. தற்போது 3 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. இன்றைய தினம் இரு நீதிபதிகள் மட்டுமே உள்ளோம். எனவே வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மீண்டும் விசாரணை நடைபெறும். இவ்வாறு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.
மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவை தவிர நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக 18 வழக் குகள் நிலுவையில் உள்ளன. இதில் 10 வழக்குகள் மசூதி தொடர்பானவை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *