தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சிக்கான ரூ.2152 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை!

Viduthalai
3 Min Read

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றச்சாட்டு!

சென்னை, பிப். 12 – தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023–2024ஆம் ஆண்டிற்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடியையும், 2024 –2025 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 2,152 கோடியையும் ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ரூ.2,152 கோடி நிதியினை விடுவிக்கவில்லை
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மானது 2018 ஆம் ஆண்டிலிருந்து செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காகத் திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்பளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது, ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற பகிர்வு முறையில் விடுவிப்பு செய்யப்படுகிறது. அதன்படி, 2024 –2025 ஆம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் 60% பங்கான ரூ.2,152 கோடி நிதியினை தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
2023– 2024 ஆம் ஆண்டுக்குத் தமிழ்நாட்டிற்கென ரூ.3,533 கோடி திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிதியில் இரண்டு தவணைகள் மட்டுமே விடுவிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் தவணை விடுவிப்பதற்கு முன்பாக ஒன்றிய அரசு PM SHRI பள்ளிகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் மட்டுமே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் நிதியினை விடுவிக்க முடியும் என வலியுறுத்தியது.

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு
PM SHRI பள்ளிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வது சார்ந்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும், அக்குழு வின் பரிந்துரையின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்களால் 23.02.2024 அன்று கடிதம் அனுப்பப்பட்டது.
PM SHRI பள்ளிகள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, தனது அறிக்கை யில் PM SHRI பள்ளிகள் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல் நிபந்தனையாக மும்மொழி கொள்கையினை பின்பற்றுவதை வலியுறுத்திஉள்ளது. இந்த நிபந்தனையானது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறைக்கு முரணாக உள்ளது என அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வலியுறுத்தல்!
எனவே, PM SHRI பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்து வதையும், ஏற்கனவே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்டக்கூறுகளைச் செயல்படுத்துவதையும் ஒன்றாகக் கருதாமல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட நிதியினை விடுவிக்குமாறு ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இருப்பினும், 2024 – 2025ஆம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் 60% பங்கான ரூ. 2,152 கோடி நிதியினை தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மேலும், ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிர தேசங்களுக்கும் ரூ. 17,632.41 கோடி நிதியினை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது!
எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023–2024 ஆம் ஆண்டிற்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடியையும், 2024–2025ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 2,152 கோடியையும் ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *