அமெரிக்காவில் முதல் முதலாக ஜாதி வன்கொடுமைக் கண்காணிப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கான குழு அமைக்க காரணமாக இருந்த ஷாமா சாவந்திற்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கும் பார்ப்பனிய அதிகார மய்யம்.
ஷாமா சாவந்த் (51), இந்திய-அமெரிக்க பொருளாதார நிபுணர் மற்றும் சியாட்டில் நகர சிட்டி கவுன்சிலின் மேனாள் உறுப்பினர், இவரது 84 வயது தாயார் நோய்வாய்ப்பட்டு பெங்களுருவில் சிகிச்சையில் உள்ளார். இவரைப் பார்க்க இந்தியா வர அவருக்கு மூன்று முறை மோடி அரசால் மறுக்கப்பட்டுள்ளது.
காரணம் இவர் சியட்டில் நகர உறுப்பினராக இருக்கும் போது அமெரிக்காவில் பார்ப்பனர்களின் ஜாதிய மனப்பான்மையை எதிர்த்து ஜாதியக் கொடுமைகளை அரசு களையவேண்டும் கண்காணிக்கவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானம் தான் அமெரிக்காவின் 3 மாகாணங்களில் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்ற முக்கிய புள்ளியாக அமைந்தது. இதுதான் அமெரிக்க வாழ் பார்ப்பனர்களுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.
ஷாமா சாவத்தின் நடவடிக்கையால் ஜாதிவெறியோடு செயல்படும் அமெரிக்கவாழ் உயர்ஜாதி இந்தியர்களை சட்ட ரீதியான கண்காணிப்புக்கு உட்படுத்தியது மேலும் கலாச்சாரக் காவலர்கள் என்று கூறிக்கொண்டு அங்கு செயல்படும் இஸ்க்கான், இண்டர் நேசனல் விசுவ ஹிந்து அமைப்பு அத்தோடு சாமியார்களால் அவ்வப்போது அங்கு நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்பட்டது. மேலும் ஷாமா சாவந்த் ஹிந்துக்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக அமெரிக்காவில் இருந்தே குரல்கொடுத்தார்.
ஷாமா சாவந்த் யார்?
தமிழரான ஷாமா சிறுவயதிலேயே மும்பை சென்று அங்கேயே உயர்கல்வி முடித்தார். பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்த அவர் அம்பேத்காரிய செயல்பாட்டாளராக திகழ்ந்த வினோத் சாவந்தை திருமணம் செய்துகொண்டார்.
மைக்ரோசாப்ட் மென்பொருள் பொறியாளரான தனது கணவர் விவேக் சாவந்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பிறகு பொருளாதாரத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார். 2003இல் வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
சியாட்டிலுக்கு குடிபெயர்ந்த பிறகு, சாவந்த் சியாட்டில் சென்ட்ரல் கல்லூரியில் துணை விரிவுரையாளராகவும், சியாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் வாசிங்டன் டகோமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். கூடுதலாக, லெக்சிங்டன், வர்ஜினியாவில் உள்ள வாசிங்டன் & லீ பல்கலைக்கழகத்தில் வருகை தரும் உதவிப் பேராசிரியராக கற்பித்தார்.
அமெரிக்காவில் தொழிலாளர் நலன் மற்றும் ஜாதிய சமூக நிறவெறி மற்றும் பாலின வெறுப்பு களுக்கு எதிராக குரல் கொடுத்தார். அவர் 2006இல் சோசலிஸ்ட் ஆல்டர்நேடிவ் அமைப்பில் இணைந்தார். 2012இல் வாசிங்டன் மாநில பிரதிநிதிகள் சபைக்கு வெற்றிபெறாத போட்டியில் ஈடுபட்ட பிறகு, 2013இல் சியாட்டில் நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சியாட்டில் நகர அளவிலான தேர்தலில் வெற்றிபெற்ற முதல் சோசலிஸ்ட் இவர்.
பின்னர் இவர் தேர்தலில் போட்டியிடாமல் 2023 ஜாதிய மற்றும் சமூக புறக்கணிப்பால பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட சோசலிஸ்ட் ஆல்டர்நேடிவின் Workers Strike Back இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். 2024ஆம் ஆண்டு புரட்சிகர தொழிலாளர் கட்சியைத் துவக்கி அதன் தலைவரக இருந்து வருகிறார்.