திருச்சி, பிப்.6- உலக புற்றுநோய் நாள் திருச்சியில் நடைபெற்றது. நாகமங்கலம் ஹர்ஷமித்ரா யர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து உலக புற்றுநோய் நாளான 1.2.2025 அன்று காலை 9 மணியளவில் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் எஸ்.குமரவேல் தலைமை வகிக்க, துணை முதல்வர் மருத்துவர் ஏ.அர்ஷியா பேகம் மற்றும் ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்று நோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் க.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் பெரியார் மருத்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவப் படிப்புகளின் இணை முதல்வர் மருத்துவர்
கே.ரேகா. இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஜி.பாலகிருஷ்ணன், மாரியம்மன் செவிலியர் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ரூபா மற்றும் சர்வைட் செவிலியர் கல்லூரி முதல்வர் மெட்டில்டா ஆகியோர் இணைந்து இப்பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மாணவர்கள் பங்கேற்பு
உலக சுகாதார அமைப்புடன் இணைந்து நடைபெற்ற இப்பேரணியில் மருத்துவர்
எஸ்.குமரவேல், முனைவர்
இரா.செந்தாமரை, மருத்துவர்
கே.ரேகா, ஜி.பாலகிருஷ்ணன், முனைவர் ஏ.ரூபா மற்றும் மெட்டில்டா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணி திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் துவங்கி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவனை வளாகத்தில் நிறைவு பெற்றது.
வெற்றிகரமாக நடைபெற்ற இப்பேரணியில் திருச்சி மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் மரு. அருண்ராஜ் மற்றும் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் டி ஈஸ்வரன் ஆகியோர் நிறைவுரை வழங்கி மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் இயக்குநர்கள் மருத்துவர் க. கோவிந்தராஜ் மற்றும் சசிப்ரியா கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் இம்மாபெரும் பேரணி நடை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.