எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடனை தள்ளுபடி செய்தது திராவிட மாடல் அரசு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை,பிப்.5- சென்னை ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு 1972 முதல் 2010 ஆண்டு வரையிலான காலங்களில் மருத்துவம், மருத்துவம் சாா்ந்த படிப்புகள் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் கல்விக் கடனாக ரூ.48.95 கோடி வழங்கப்பட்டது.
இந்தத் தொகையை மாணவா்களிடமிருந்து வசூலிக்க இயலாத நிலையும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் இல்லாத நிலையும் உள்ளது. அத்துடன் வசூலிக்க வேண்டிய நபா்களை அடையாளம் காண இயலாத நிலையும் உள்ளது.
எனவே, மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனான ரூ.48.95 கோடியை, சிறப்பினமாகக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *