கவனத்திற்குரிய  முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read
5.2.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உ.பி. கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட அரசு ஏன் மறுக்கிறது? மக்களவையில் அகிலேஷ் கேள்வி.
* தென் மாநிலங்களுக்கான நிதி உதவி, திட்டங்கள், ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பெரிதாக காணப்படவில்லை, தலையங்கம்.
* தெலங்கானா அரசு நடத்திய ஜாதிவாரி சர்வே அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடுவோம், முதலமைச்சர் ரேவந்த் உறுதி.
* நீதிபதி ஷமீம் அக்தர் தலைமையிலான குழு அறிக்கையின் அடிப்படையில் பட்டியல் பிரிவினர் மூன்று பிரிவுகளாக பிரிக்க தெலுங்கானா அரசு முடிவு. கிரிமிலேயர் இருக்கலாம் என்ற குழுவின் பரிந்துரை நிராகரிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் இரண்டாவது முறையாக ராகுல் காந்தி ‘சமூக நீதி’ என்ற கருத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்ய செல்கிறார்.
* மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, வேலையின்மை முதல் மணிப்பூர் கலவரம் வரை எதிர்க்கட்சிகள் எழுப்பின. பணவீக்கம் மற்றும் நலத் திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பல பிரச்சினைகள் குடியரசுத் தலைவரின் உரையில் இல்லை என்றும் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மக்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு, நாளை டெல்லி தேர்தலுக்கு முன்னதாக பேசும் தேர்தல் உரையை போன்று இருந்தது என்றும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம்.
டெலிகிராப்:
* “டெல்லியில் நாளை வாக்களிப்பின் போது முழுமையாக சமரசம் செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் அனைத்து சுயேச்சைகளையும் கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் ஆணையம் தங்கள் அரசியல் முதலாளிகள் செயல்படுத்த அனுமதிக்கும் வாக்காளர் மோசடி/போலி வாக்காளர்கள் குறித்து விழிப்புடன் இருங்கள்” ‘தேவைப்பட்டால், தேர்தல் ஆணையம் காட்டும் கடைசி ஒரு மணி நேரத்தில் பதிவாகும் அதிக எண்ணிக்கைக் குறித்து பதிவு செய்ய காட்சிப் பதிவு கேமராக்களை வைத்திருங்கள் என உத்தவ் மகன் ஆதித்யா எச்சரிக்கை.
* நாடு தழுவிய ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை தெலுங் கானா சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது.
* குஜராத் பொது சிவில் சட்ட குழு தலைவராக உத்தரகாண்ட் குழுவுக்கு தலைமை தாங்கிய அதே ரஞ்சனா தேசாய் நியமனம்; ‘கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்களுக்கு தடையாக இருக்கும்’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சட்டவிரோதமாக குடியேறியதாக 205 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா: ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்
.- குடந்தை கருணா
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *