தலைநகரில் சட்ட விரோதமாகக் கட்டப்படும் நடைபாதைக் கோவில்கள்!
சட்ட விரோதமாக சென்னை அசோக் நகரில்
பிள்ளையார் கோவில் (இடதுபுறம்)
சென்னை, பிப்.3 சென்னை அசோக் நகர் புதூர் அரசுப் பள்ளியின் அருகே சாலையின் ஓரத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய பிள்ளையார் சிலை வைத்தனர். இன்று அது பெரிய கோவிலாக மாறிவிட்டது, அதற்கு ஷிப்ட் முறையில் பார்ப்பன அர்ச்சகர்கள் வந்து பூஜை செய்கின்றனர். அங்கேயே நிரந்தரமாக ஓர் அர்ச்சகப் பார்ப்பனர் ‘டேரா‘ போட்டுவிட்டார். பூக்கடை முளைத்துவிட்டது, தேங்காய், பழம், பொறிக்கடையும் முளைத்துவிட்டது. ஆண்டுதோறும் பிள்ளையார் சதூர்த்தி இங்கு சமீபகாலமாக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
தற்போது அதற்கு எதிர்புறமுள்ள சாலை சந்திப்பில், திடீரென ஒரு சாயிபாபா கோவிலை உருவாக்கி உள்ளார்கள்.
ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் அங்கு சாமியானா பந்தல் போட்டு, பிரசாதம் என்ற பெயரில் அன்னதானம் கொடுக்கும் நாடகத்தைத் துவங்கி உள்ளனர். இதே போன்றுதான் 2008 ஆம் ஆண்டு ஒரு பிள்ளையார் சிலையோடு துவங்கி இன்று நவசித்தி விநாயகர் என்று பெயரோடு பிரபலமாகிவிட்டது.
தற்போது சாயிபாபா கோவில்; இபப்டியே விட்டால், இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இதுவும் சிறீ சாயிவிநாயகா என்று கோவிலாக்கி விடுவார்கள்
இந்த இரண்டு சட்டவிரோதg் கோவில்கள் இரண்டு பள்ளிகளின் சுவற்றை ஒட்டியே எழுப்பட்டுள்ளன.
சென்னை அசோக் நகரில் நடைபாதையில் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ள சாய்பாபா கோவில் (வலதுபுறம்)
ஜவகர் வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளி சுவரில் சாயிபாபா கோவில், புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி சுவரில் நவசித்தி விநாயகர் கோவில் ஏற்கெனவே பிள்ளையார் சதூர்த்தி, ஆயுதபூஜை, மார்கழி மாதத்தில் மாலை போடும் சாமியார்கள் கூட்டம் என்று அவ்வப்போது ஆக்ரமித்துக் கட்டப்பட்ட இக்கோவிலில், கூட்டம் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிதாக கட்டப்பட்டுவரும் சாயிபாபா கோவிலையும் ஏற்கெனவே சட்டவிரோதமாக பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு இடையூறாக இருக்கும் பிள்ளையார் கோவிலையும் அகற்றவேண்டும்.