ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் தெற்கு நத்தம் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
5 Min Read

தந்தை பெரியார் முழு உருவச்சிலை; ஆசிரியர் சண்முகம்-சரோஜா நினைவு பெரியார் படிப்பகம்; தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் மே மாதத்தில் திறந்திட முடிவு

தெற்குநத்தம், பிப்.4 தந்தை பெரியார் முழு உருவச்சிலை; ஆசிரியர் சண்முகம்-சரோஜா நினைவு பெரியார் படிப்பகம்; தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் ஆகியவற்றை மே மாதத்தில் திறந்திட ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் தெற்கு நத்தத்தில் நடைபெற்ற கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2.2.2025 அன்று மாலை 6.30 மணியளவில் தெற்குநத்தம் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் தெற்குநத்தம்
அ. சுப்பிரமணியன் இல்லத்தில், வடக்கு ஒன்றியத் தலைவர் இரா.துரைராசு தலைமையில் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார்
அ. சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தொடக்க உரை யாற்றினார். அவர், தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையை ஏற்று தெற்கு நத்தம் கழகத் தோழர்கள் இயக்கத்திற்காக வழங்கிய பங்களிப்பு, உழைப்பு, ஆற்றல் குறித்தும், தந்தை பெரியார் சிலை, படிப்பகம், நூலகம் அமைப்பதன் அவசியம் குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார் . தெற்குநத்தம் தோழர்கள் அனைவருமே குடும்பம் குடும்பமாக இயக்கப் பணியாற்றியதும், ஒரத்தாடு ஒன்றியத்தில் தொடர்ந்து தோழர்கள் இன்றளவும் பணியாற்றி வருவதையும், தலைமைக் கிராமம் ஆழிவாய்க்கால் துணைக் கிராமமாக இருந்த நத்தம் என்ற பெயரினை தெற்குநத்தம் என பெயரை சூட்டச் செய்தது திராவிடர் கழகத்தின் தனி அடையாளம் என குறிப்பிட்டார்.

தெற்குநத்தம் வரலாற்றில் மறைந்த இயக்க சுயமரியாதைச் சுடரொளிகள் ஆசிரியர் ம.சண்முகம் – ச. சரோஜா அம்மையார் ஆகியோரது குடும்பத்தினரது உழைப்பிற்கு முன், பின் எனக் குறிப்பிடலாம் என நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
வீதி நாடகக் கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன், ஓய்வு பெற்ற இராணுவவீரர்
ச. முத்துச்செல்வன். தோழர் மூ.மாணிக்கம் இளம் விஞ்ஞானி இரா. கருப்பையன், திமுக பொறுப்பாளர் வேம்பையன், மாணவர் கழகம் சு. காவியன், பிள்ளையார்பட்டி முருகேசன், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாவட்ட செயலாளர் சிகாமணி, பூதலூர் ஒன்றிய துணை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் சு.மாதவி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் ஆ.லட்சுமணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு, தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன், தஞ்சை மாநகர இணை செயலாளர் இரா‌‌.வீரக்குமார், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ. நாராயணசாமி, ஒரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார், ஒரத்தநாடு நகர இளைஞரணி துணைச் செயலாளர் அ.மாதவன், மாவட்டத் துணைச் செயலாளர் ரெ. சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் ப.நரேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே.ராஜவேல், பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் அருணகிரி ஆகியோர் உரையைத் தொடர்ந்து, நிறைவாக தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் உரையாற்றினார். தந்தை பெரியார் முழு உருவச் சிலையை அன்பளிப்பாக வழங்குவதாக தனது உரையில் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகம்

மூன்று மாதத்திற்குள்…
மாநில மாவட்ட கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று, தெற்கு நத்தத்தில் ஆசிரியர் சண்முகம்- சரோஜா நினைவு பெரியார் படிப்பகமும், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி நூலகம், பெரியார் முழு உருவச்சிலையும் 3 மாதத்திற்குள் அமைப்பதற்கு தெற்குநத்தம் கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் முழு ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற பொறுப்பாளர்கள் அனைவரும் பெரியார் சிலை மற்றும் படிப்பகம் விரைவில் அமைப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தனர். ஒன்றிய இளைஞரணி செய லாளர் ச. குமரவேல் நன்றி கூறினார் .

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன
தெற்கு நத்தம் ஆசிரியர் ம.சண்முகத்தின் இணையர், ச.சித்தார்த்தன், ச.முத்துச்செல்வன் ஆகியோரின் தாயார்
ச. சரோஜா அம்மையார் மறைவிற்கு இரங்கலும், வீர வணக்க மும் தெரிவிக்கப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம், தெற்குநத்தம் கிராமத்தில் அறிவுலக ஆசன் தலைவர் தந்தை பெரியார் சிலை மற்றும் ஆசிரியர் சண்முகம்-சரோஜா நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் அமைத்து 2025 மே அல்லது ஜூன் மாதத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்து திறப்பு விழாவினை மாநாடு போல் எழுச்சியுடன் நடத்துவது என

தீர்மானிக்கப்பட்டது
மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பொருளாதார உதவி, உழைப்பு உள்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது
தெற்குநத்தம் கிராமத்தில் அடுத்த தலைமுறை இளை ஞர்கள் மாணவர்களுக்கு தந்தை பெரியாரின் கொள்கைகளை சேர்த்திடும் வகையில் பரப்புரை கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது

அமைப்புக்குழு
ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம், தெற்கு நத்தம் தந்தை பெரியார் சிலை மற்றும் ஆசிரியர் சண்முகம்-சரோஜா நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் அமைப்புக்குழு

புரவலர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன்
தஞ்சை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்
தஞ்சை மாவட்டக்காப்பாளர் மு.அய்யனார்
தஞ்சை மாவட்டச்செயலாளர் அ.அருணகிரி
ஒரத்தநாடுவடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு
சேதுராயன்குடிக்காடு தலைவர் மா.இராசப்பன்
மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன்
துணைத் தலைவர்கள்
வீதி நாடக கலைக்குழு மாநில அமைப்பாளர்
பி. பெரியார்நேசன்
கிளைக் கழகத் தலைவர் பொ.கணேசன்
செயலாளர்
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன்
துணைச் செயலாளர்கள்
தஞ்சை தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அ.தனபால்
கிளைக்கழக செயலாளர் ச.ஆசைத்தம்பி
பொருளாளர்
வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல்
அமைப்புக்குழு உறுப்பினர்கள்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே.ராஜவேல், ஒரத்தநாடு நகரத்தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், ஒரத்தநாடு நகரச்செயலாளர் பு.செந்தில்குமார், தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாநால். பரமசிவம், நா.சண்முகம், கு.ஏகாம்பரம், இரா கருப்பையன், ச.முத்துச்செல்வன், க.கிருஷ்ணமூர்த்தி, கோ.ராஜா, மூ.மாணிக்கம், சி.சாமிநாதன், ரெ.லட்சுமணன், சி.அன்பழகன், வழக்குரைஞர் அ.மதியழ கன், ரெ.அண்ணாத்துரை, சி.நாகராசு,சி.வேலாயுதம், ரெ.குமரவேல், அ.அஞ்சாதேவன், க.வேம்பையன், இரா.கோவிந்தராசு, க.வீராச்சாமி, கோ.கந்தசாமி, சி.சுப்பிரமணியன், த.எழிலரசன்,கோ.மன்னர்மன்னன், சி.தமிழ்ச்செல்வி, சு. மாதவி,பொறியாளர் சி. பிரபாகரன், பொறியாளர் வே.தமிழ்ச்செல்வன், சு.மா.காவியன், த.சிந்தனைச் செல்வன், த.செம்மொழிச்செல்வன், தெற்குநத்தம் கார் மெக்கானிக் பெ.வீரமணி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *