கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும் அகிலேஷ் வலியுறுத்தல்

viduthalai
2 Min Read

லக்னோ, பிப்.3 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கடந்த ஜனவரி 29 அன்று மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்துகொண்ட போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் குடும் பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக் கப்பட்டது.

மறைப்பு

இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிந்தவர் களின் உண்மையான எண்ணிக்கையை யோகி ஆதித்யநாத் தலைமையி லான பாஜக அரசு மறைப்பதாக சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

1.2.2025 அன்று நாடாளு மன்றத்தில் ஒன்றிய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த சூழலில் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.கள் கும்பமேளா கூட்டநெரிசல் உயிரிழப்புகள் குறித்து விவாதிக்க கோரினர்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொடங்கும்முன் அகி லேஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளியே செய்தியர்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், மகா கும்ப கூட்ட நெரிசலில் உயிரிழந் தவர்களின் பட்டியலை அரசு வெளியிட வேண் டும் என்று தெரிவித்தார்.

மகா கும்பமேளாவில் உள்ளவர்கள் இன்னும் தங்கள் உறவினர்களைத் தேடிக் கொண்டிருக் கிறார்கள்.

சரியான எண்ணிக்கை

முதலமைச்சர் பல முறை அங்கு சென்றுள் ளார், ஒன்றிய உள்துறை அமைச்சர் அங்கு சென் றுள்ளார், இன்று குடியரசு துணைத் தலைவர் செல்கிறார், பிரதமரும் அங்கு செல்வார். ஆனால் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை அரசாங்கம் வழங்க தவறிவிட்டது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போன வர்கள் பட்டியலை அரசு வெளியிட வேண்டும். இந்துக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர், அரசு விழித்துக்கொள்ள வேண்டும். நான் முன்பே சொன்னதுபோல் ராணுவத்தை அங்கு வரவழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் கூட்டநெரிசல் ஏற்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போன வர்கள் பட்டியலை அரசு வெளியிட வேண்டும். இந்துக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர், அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.

நான் முன்பே சொன்னதுபோல் ராணுவத்தை அங்கு வரவழைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசி னார். இதற்கிடையே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூட்டநெரிசல் ஏற்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்தது குறிப் பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *