தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மசிறீ விருது அறிவிப்பு

Viduthalai
1 Min Read

புதுடில்லி,ஜன.26- பத்ம விருதுகள் ஆண்டு தோறும் குடியரசு நாளை முன்னிட்டு அறிவிக்கப் படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி, இலக்கியம், மருத்துவம், கலை, விளை யாட்டு, சமூகப்பணி, வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல் வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனை களுக்காக பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டில் பத்மசிறீ விருது பெறும் 12 நபர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்ம சிறீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தவில் இசைக்கலையில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் வாய்ந்த புதுச்சேரியைச் சேர்ந்த இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்ம சிறீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டி யில் தங்கம் வென்ற அரியானாவைச் சேர்ந்த அர்விந்தர் சிங்குக்கு பத்ம சிறீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிதல், தடுப்பு மற்றும் மேலாண் மையில் சிறந்து விளங்கும் டில்லியைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான மருத்துவர் நீரஜா பட்லாவுக்கு பத்மசிறீ விருது அறிவிக்கப்பட் டுள்ளது.
அறக்கட்டளையின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 22 ஆண்டு களாக உதவிவரும் பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பீம் சிங்குக்கு பத்ம சிறீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்தைச் சேர்ந்த விவசாயி ஹாங்திங், இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி அரிமன் சர்மா இருவருக்கும் பத்மசிறீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக தொழில் முனைவோர் சாலி ஹோல்கர், ஜக்தீஷ் ஜோஷிலா, மராத்தி எழுத்தாளர் மாருதி புஜங்ராவ் சிட்டம் பள்ளிக்கும் பத்ம சிறீ விருது அறிவிக்கப்பட் டுள்ளது.
குவைத்தைச் சேர்ந்த யோகா உடற் பயிற்சியாளர் ஷெய்கா அல் சபாவுக்கும் பத்மசிறீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *