தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லத்தைச் சேர்ந்த சிங் ராமச்சந்திரன் மறைந்ததையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லத்தைச் சேர்ந்த சிங் ராமச்சந்திரன் மறைந்ததையொட்டி அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார் (11.3.2023)
லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா
லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா 12.3.2023 அன்று லால்குடியில் பெரியார் திருமண மாளிகையில் நடைபெற்றது. அவருடைய மகன் பெரியார் பிரைன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஆடிட்டர் மோகன், லோகநாதன், கிருஷ்ணமூர்த்தி, லால்குடி ஆல்பர்ட் ஆகியோர்…
“ கார் டயர் வெடித்தது ‘கடவுளின்’ செயலா?” : உயர்நீதிமன்றம் கேள்வி
மும்பை, மார்ச் 13 டயர் வெடிப்பது கடவுளின் செயல் அல்ல, மனித அலட்சியம் என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், கார் விபத்தில் இறந்தவரின் குடும்பத் திற்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நிரா கரித்தது. அக்டோபர்…
“பாஜகவினர் நடத்திய அரைகுறை ஆடையில் அனுமன் சிலைக்கு முன் பெண் பாடி பில்டர்கள் ஷோ..” காங்கிரஸ் கண்டனம்
போபால், மார்ச் 13- மத்தியப் பிரதே சத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்குள்ள ரட்லாம் மாவட்டத்தில் பெண்க ளின் 'பாடி பில்டிங்' நிகழ்ச்சி நேற்று (12.3.2023) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ரட்லாம் தொகுதி…
நானோ, என் குடும்பத்தினரோ ஒருநாளும் ஆர்எஸ்எஸ் – பா.ஜ.க.வுக்கு அடிபணிய மாட்டோம்! : லாலு பிரசாத்
புதுடில்லி, மார்ச் 13 ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர்கள் முன் தலை வணங்கமாட்டோம் என்று லாலு பிர சாத் அறிவித்துள்ளார். டில்லி, பீகார் மாநிலங்களில், லாலு பிரசாத் மற்றும்…
எதிர்க்கட்சிகள் போராட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடில்லி, மார்ச் 13- நாடாளு மன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (13.3.2023) காலை 11 மணிக்கு இரு அவை களிலும் தொடங்கியது. அவை தொடங்கிய துடன் இந்திய நாடாளு மன்றத்தை பற்றி பிரிட் டனில் ராகுல் காந்தி பேசியதற்கு…
காவி பயங்கரவாதிக்கு சிறை நீதிமன்ற உத்தரவும் – நமது பங்களிப்பும்
முத்தமிழறிஞர் கலைஞர், கவிஞர் கனி மொழி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ வழக்குரைஞர் சங்கத்தை சேர்ந்த வழக்குரைஞர் கோபிநாத்…
சிண்டு முடிந்திடுவோய் போற்றி! ‘தினமலர்’ – 13.3.2023
கடவுளுக்கே காணிக்கை என்னும் இலஞ்சம் கொடுத்து கடவுளுக்கே கடுக்காய்க் கொடுக்கும் கூட்டமாயிற்றே - செத்துப் போன ஆசாமி பெயரைச் சொல்லி ஆண்டாண்டுகளுக்கு திதி கொடுக்கும் புரோகிதக் கூட்டமான காமாலைக் கண்களுக்குப் பார்ப்பது எல்லாம் மஞ்சளாகவே தெரிகிறது.ஆட்சியைக் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து…
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் – பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற வில்லுப்பாட்டு, வாழ்வியல் குறுநாடகம், சிலம்பாட்டம் (11.3.2023)
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் - பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற வில்லுப்பாட்டு, வாழ்வியல் குறுநாடகம், சிலம்பாட்டம் (11.3.2023)
‘சுதந்திர’ நாட்டில் இன்னும் ஜாதி, தீண்டாமையா?
தெலங்கானா தனியார் கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் விடுதிக் கண்காணிப்பாளர் ஆகியோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவனை ஜாதிரீதியாக கொடுமைப்படுத்தியதால் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார், இந்தக் கொலையில் கல்லூரி முதல்வர், பேராசிரியர், விடுதிக் காப்பாளர் மற்றும் அலுவலக…
