தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடை அளிக்கலாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தாய்ப்பால் கொடை ஆதரவில்லாமல் கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கும், உடல் ஆரோக்கியமின்றி பிறந்த குழந்தைகளுக்கும் நீங்கள் அன்பால் கொடுக்கும் பரிசு. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாய்ப்பால் வங்கியை அணுகவும். 19 மாவட்டங்களில் இயங்கும் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களுடன் தாய்ப்பால் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது.