யுனெஸ்கோ அங்கீகரித்த இந்தியாவின் பாரம்பரிய சின்னங்கள்

2 Min Read

மும்பை, டிச. 7- உலகத் தின் பழைமையான பாரம் பரியச் சின்னங்களால் இந்தியாவைச் சேர்ந்த இயற்கை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது. அவை இங்கே….

மனாஸ் வனவிலங்கு சரணாலயம், அசாம்

இமாலயத்தின் அடிவாரத்தில் உள்ள மனாஸ் ஆற்றின் சமவெளிப் பகுதியில் இது அமைந்துள்ளது. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விரிந்து பரந்துள்ளது. பாலூட்டி விலங்குகள் அதிகம் வசிக்கும் சரணாலயம் இது.

குதுப்மினார், டில்லி

டில்லியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குதுப்மினார், சிவப்புக் கற்களால் உருவாகியுள்ள 72.5 மீட்டர் உயரமுள்ள கோபுரம். 13ஆம் நூற் றாண்டில் கட்டப்பட்டது.

செங்கோட்டை, டில்லி

17ஆம் நூற்றாண்டில் ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டது செங் கோட்டை. டில்லியின் வடக்குப் பகுதியில் 120 ஏக்கர் பரப்பில் அமைந் துள்ளது.
அஜந்தா குகை ஓவியங்கள், மராட்டியம்

இந்தியாவின் பெருமைமிகு அடையா ளங்களில் அஜந்தா குகை ஓவியங்கள் மிக முக்கியமானது. இரண்டு தளங்களாக கட்டப்பட்டது. முதல் தளம் இரண்டாம் நூற்றாண்டில் உருவாகியுள்ளது. பச்சிலை களால் உருவாக்கப் பட்ட பழம்பெரும் ஓவியங்கள் இங்கு உள்ளன.

மாமல்லபுரம்

சென்னையில் இருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ளது மாமல்லபுரம். அங்கு காணப்படும் கலை எழில் கொஞ்சும் கோவில்கள் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டவை. உல கத்திலேயே திறந்தவெளி சிற்பங்களாக இந்த நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. இது 1984ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்ன மாக அறிவிக் கப்பட்டது.

ஆக்ரா கோட்டை

ஆக்ராவின் சிவப்புக் கோட்டை என இது அழைக்கப்படுகிறது . முகலாய அரசர்களால் கட்டப்பட்டது. யமுனை நதியின் வலது கரையில் சலவைக் கற்களால் ஜொலிக்கிறது இக்கோட்டை.

தாஜ்மகால், ஆக்ரா

உலகின் ஏழு அதிச யங்களில் ஒன்று. தனது காதல் மனைவி பேகம் மும்தாஜ் மஹால் நினைவாக ஷாஜ ஹான் கட்டிய கலைக்கோவில். முகலாய கட்டடக் கலை நுட்பத்துடன் வெள்ளை மார்பிள் கற்களால் கட்ட மைக்கப்பட்டது.

பெரிய கோவில், தஞ்சாவூர்

சோழ சாம்ராஜ்ஜியத் தின் கலைச்சின்னம் இக்கோவில் – காலத் தால் அழியாத கலைச்சின்னமாக விளங்கும் இக் கோவில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. 1987ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *