புதுடில்லி, டிச.3 நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய சிந்தனை தேவைப்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக ராகுல் வெளி யிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் பலன்கள் ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம், ஏழைகள் பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகளால் சிரமப்படுகின்றனர்.
சில்லறை பணவீக்கம் 14 மாதங் களில் இல்லாத அளவுக்கு 6.21% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட இந்த ஆண்டு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது.
* ரூபாய் அதன் குறைந்தபட்ச மதிப்பான 84.50அய் எட்டியது.
* வேலையின்மை ஏற்கனவே 45 ஆண்டுகால சாதனையை முறியடித் துள்ளது.
ஆர்.பி.அய்., வட்டி விகித முடிவு சந்தையின் போக்கை தீர்மானிக்கும்.
* கடந்த 5 ஆண்டுகளில், தொழி லாளர்கள், ஊழியர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது.
* மொத்த விற்பனையில் மலிவு விலை வீடுகளின் பங்கு கடந்த ஆண்டு 38% இல் இருந்து 22% ஆகக் குறைந்துள்ளது.
* கடந்த 10 ஆண்டுகளில் கார்ப் பரேட் வரியின் பங்கு 7% குறைந்துள்ளது, வருமான வரி 11% அதிகரித்துள்ளது.
* பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி., காரணமாக, பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்கு 50 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு வெறும் 13% ஆக குறைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், புதிய வேலை வாய்ப்புகள் எவ்வாறு உருவாக்கப்படும்?
அதனால்தான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய சிந்தனை தேவைப்படுகிறது அனைவரும் முன்னேற சம வாய்ப்பு கிடைக்கும் போதுதான் நமது பொருளாதாரம் முன்னேறும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.