புதுடில்லி, நவ. 29- காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 108ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நேற்று (28.11.2024) நடைபெற்றது. இதில் 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கூட்டத் தில் வழக்கம்போல 4 மாநில நீர் தரவுகளும் சேகரிக்கப்பட் டன. தற்போது 4 மாநிலங்களிலும் மழை பெய்து வருவதால்தண்ணீர் பங்கீடு பற்றி காரசாரமான விவாதம் இல்லை. இருந்தாலும் டிசம் பர் மாதத்துக்கான தண்ணீரை முறையாக வழங்க கருநாடகத்தை அறிவுறுத்துமாறு தமிழ்நாடு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.