சம்பல் மசூதி தொடர்பான வன்முறைக்குக் காரணம் பிஜேபி தான்: ராகுல் குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

புதுடில்லி, நவ.26 ஒன்றிய மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில், அரசு அதிகாரம் பயன்படுத்தப்படுவது மாநில அல்லது நாட்டின் நலனுக்காக அல்ல; மாறாக, ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று சம்பல் மோதல் குறித்து ராகுல் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 24.11.2024 அன்று சம்பலில் உள்ள முகலாயர் கால மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட ஆய்வை எதிர்த்த போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் பலியாயினர். பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் இன்று (26.11.2024) காலை பலியானார்.

இந்த நிலையில்தான், ராகுல் தன்னு டைய ‘எக்ஸ்‘ பக்கத்தில், “உத்தரபிரதேசத்தின் சம்பல் பகுதியில் நேரிட்டிருக்கும் மோதல் விவகாரத்தில், மாநில அரசின் ஒருபக்க சார்பும், அவசர நடவடிக்கைகளும் மிகவும் மோசமானதாகும்.

வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட அல்லது மாநில நிர்வாகம், அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் பெறாமல், உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், நடவடிக்கையை மேற்கொண்டு வருவது, ஏற்கனவே இருக்கும் சூழலை மேலும் சீர்குலைத்து, மோதலை உண்டாக்கி, மக்கள் உயிரிழக்க வழிவகுத்துள்ளது. இதற்கு பா.ஜ.க. அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள ஹிந்து-முஸ்லிம் சமூக மக்களுக்கு இடையே பிளவையும், பாகுபாட்டையும் உருவாக்கவே பா.ஜ.க. தனது அதிகாரத்தைப் பயன்படுத்து கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் உடனடியாக தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வ தாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *