மகாராட்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மகாராட்டிராவில் பா.ஜ.க. கூட்டணியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.
பிரியங்கா காந்தி வெற்றி
கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கருநாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றது. பஞ்சாபில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களிலும், ஆம் ஆத்மி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.