கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

16.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடியில் காலணி உற்பத்தி ஆலை: தைவானை சேர்ந்த பிரபல காலணி நிறுவனம் அமைக்கிறது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜார்கண்ட் தேர்தல் பரப்புரைக்கு சென்ற ராகுல் ஹெலிகாப்டர் தாமதப்படுத்தப்பட்டது; சம வாய்ப்பு தரப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் தாக்கீது.
* நான் மோடியை பார்த்தோ அல்லது அவரது 56 அங்குல மார்பை பார்த்தோ அஞ்சவில்லை. அவர் பெரும்பணக்காரர்களின் கைப்பாவையாக உள்ளார் என ராகுல் காந்தி பேச்சு.
* நாட்டை மோடி பிளவுபடுத்துகிறார் – சரத் பவார் தாக்கு.
* இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் அதிபரின் கட்சி அமோக வெற்றி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த எந்த மதமும் கட்டளையிடவில்லை: திருவிழாக்களில் யானைகளை கட்டுப்படுத்த வேண்டும், கேரள உயர்நீதிமன்றம் கண்டிப்பு.
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாஜகவும், மோடியும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னிதலா பேச்சு.
* பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாளில், அவரது அபிலாஷைகள் – சுதந்திரம், நீதி, அடையாளம் மற்றும் கண்ணியம் – நம் நாட்டின் இளைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 8 ஈரானியர்கள் கைது!
தி டெலிகிராப்:
* உ.பி. மாநிலம் ஜான்சி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தனர், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஹிந்துக்களே ஒன்றுபடுங்கள் (‘படேங்கே தோ கதேங்கே) என்ற உ.பி. முதலமைச்சர் யோகி சாமியார் முழக்கத்திற்கு மகாராட்டிரா பாஜகவினர் பங்கஜ் முண்டே, அசோக் சவான் எதிர்ப்பு.
* தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மகப்பேறு இறப்புகள் பாதியாக குறைந்துள்ளதாகவும், குழந்தை இறப்பு ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *