பாஜகவின் ‘இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் ஆபத்து’ என்பது மகாராட்டிராவில் பலிக்காது: அஜித் பவார்

Viduthalai
3 Min Read

மும்பை,நவ.12 பாஜகவின் ‘இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் ஆபத்து’ என்பது மகாராட்டிராவில் பலிக்காது என்று பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அஜித் பவார் கூறியுள்ளார்.
288 தொகுதிகளை கொண்ட மகாராட்டிர சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி (பாஜக – அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் – ஷிண்டே சிவசேனா) மற்றும் மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ் – சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் – உத்தவ் சிவசேனா)ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.
தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் பாஜக தேர்தல்க ளின்போது கையில் எடுக்கும் வழக்க மான அஸ்திரமான இந்துக்களே ஒன்று படுங்கள், தனித்தனியாகி இருந்தால் ஆபத்து என்ற உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாசகத்தை தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து வருகிறது.
இது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்மீது வெறுப்பை உண்டுபண்ணும் பிளவுவாத அரசியல் யுக்தி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

சில நாள்கள் முன்னர் தூலேவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த முழக்கத்தை எழுப்பினார்.
இந்நிலையில் பாஜகவின் இந்த வாசகம் குறித்து அக்கட்சியின் கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் மற்றும் மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் தற்போது விமர்சித்துள்ளார். சரத் பவார் தலை வராக இருந்த சிவசேனாவை உடைத்து கடந்த 2023 இல் பாஜகவுடன் சேர்ந்த அஜித்பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவைத் தேர்த லில் மகாராட்டிராவில் இந்தியா கூட்ட ணியிடம் பாஜக கூட்டணி அதிக இடங்களை இழந்ததால் கூட்டணியில் உள்ள அஜித் பவார் மீது அதிருப்தி எழுந்தது.
அதுமுதல் அவ்வப்போது அஜித்ப வார் கூறி வரும் கருத்துகள் பாஜகவை மறைமுகமாக விமர்சிப்பதாக இருந்தன. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தனியார் செய்தி நாளிதழ் ஒன்றுக்கு அஜித் பவார் பேட்டியளித்துள்ளார்.
அங்கு, ‘batenge toh katenge’ (நாம் பிரித்திருந்தால் நம்மை வெட்டு வார்கள்), ‘ek hain toh safe hain’ (ஒருவராக இருந்தால் ஆபத்து – இருவராக இருந்தால்தான் பாதுகாப்பு) எனவே இந்துக்கள் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்ற செய்தித்தாள்களிலும் பிரச்சார மேடைகளிலும் பாஜக விளம்பரப்படுத்துவதைப் பற்றி அஜித் பாவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், நான் முதலில் இருந்தே அதை ஆதரிக்க வில்லை. பலமுறை இதுபற்றி நான் கூறியிருக்கிறேன். மகாரட்டிராவில் இந்த வாசகங்கள் வேலைக்கு ஆகாது. உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பிற இடங்களில் வேண்டு மானால் இவை வேலை செய்யலாம் என்று தெரிவித்தார்.
முன்னதாக சாமியார் ஆதித்யநாத் கூறிய இந்த முழக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த அஜித் பவார், மகாராட்டிரா சதிராபாத்தில் சிவாஜி மகாராஜ், ராஜார்ஷி சாஹு மகாராஜ், மகாத்மா பூலே ஆகியோரின் நிலம். எனவே மகாராட்டிராவை மற்ற மாநிலங்களுடன் நீங்கள் ஒப்பிட முடியாது, இங்குள்ள மக்கள் இதை விரும்பமாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
மேலும் கடந்த வாரம் நடந்த பேரணியின்போது பேசிய அஜித் பவார், மகாராட்டிரா எப்போதும் மத நல்லிணக்கம் கொண்ட பிரதேசம் என கூறினார். ஒரு பக்கம் பாஜக இந்த முழக்கங்களுக்கு செய்தித்தாள்களின் விளம்பரம் கொடுத்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில் மறுபுறம் இதற்கு கூட்டணியில் உள்ள கட்சித் தலைவரே எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *