சென்னை, நவ.3- ஒரகடத்தில் ரூ.2,800 கோடியில் அமையவுள்ள உலகளாவிய மய்யத்துக்கான கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி பிரான்ஸ் நாட்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
செயின்ட் கோபேன் நிறுவனம்
பிரான்சு நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயின்ட் கோபேன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், சென்னை ஒரகடத் தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.2,858 கோடி யில் 127 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய மய்யத்தை அமைக்க இருக்கிறது. இதன் மூலம் 1,100 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழ்நாட்டில் செயின்ட் கோபேன் நிறுவனம் சிறீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூரில் பல் வேறு வணிக திட்டங்களை தொடங்கியுள்ளது. இதற்காக, சுமார் ரூ.5 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம்5ஆயிரம்பேருக்குவேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
தற்போது, சென்னை ஒரகடத்தில் செயின்ட் கோபேன் நிறுவனத்தின் புதிய உற்பத்தி திட்டமும், சிறீபெரும்புதூர், பெருந்துறை, திருவள்ளூர் ஆகிய இடங் களில் விரிவாக்கத் திட்டப் பணிகளும் நடை பெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மய்யத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தநிலையில், உலகளாவிய மய்யத்தின் கட்டுமான பணி களை மேற்கொள்ள செயின்ட் கோபேன் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளது. தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதில், ரூ.51 ஆயிரம் கோடியில் 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் ரூ.68,873 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங் கப்பட்டுள்ளதால், 1,06,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.