அசாம் முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை!
புதுடில்லி, நவ.3 ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக கூட்டணியின் வெற்றியின் மூலம் ஸநாதன தர்மத்தைப் பாதுகாப்போம் என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தால் பர்கானா மண்டலத்தில் ஹிந்துக்களின் மக்கள் தொகை 90%- இல் இருந்து 67% ஆக குறைந்துவிட்டது என வும் ஹிமந்த பிஸ்வா பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேர வைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய 2 கட்டங்களாக மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இணை பொறுப்பாளரான அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஹிமந்த பிஸ்வா, இந்த தேர்தல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரசுக்கானதாக இருக் காது. ஸநாதன தர்மத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாக்கக் கூடிய தேர்தல் இது. பாஜகவின் வெற்றியின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸநாதன தர்மத்தைப் பாது காப்போம்.
6 மாவட்டங்களை உள்ள டக்கிய சந்தால் பர்கானா மண்டலத்தில் 1951 ஆம் ஆண்டு மொத்த மக்கள் தொகை 26 லட்சம் பேர். அப்போது 90% ஹிந்துக்கள்; 9.43%தான் முஸ்லிம்கள். பழங்குடிகளின் மக்கள் தொகை 10.34 லட்சமாக இருந்தது.
ஹிந்துக்களின் மக்கள் தொகையில் இது 44%. ஆனால் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஹிந்துக்கள் மக்கள் தொகை 67% ஆக குறைந்துவிட்டது. 44% ஆக இருந்த பழங்குடிகள் மக்கள் தொகை வெறும் 28% ஆக குறைந்து போனது.
புதியதாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது ஹிந்துக்களின் விழுக்காடு 60% ஆகவும் குறையக் கூடும். பூர்வீக முஸ்லிம்களின் மக்கள் தொகை இங்கே அதிகரிக்கவில்லை. மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் வழியாக ஜார்க்கண்ட்டுக்குள் ஊடுருவிய வங்கதேச முஸ்லிம்கள்தான் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்த ஊடுருவல் முஸ்லிம்கள், பழங்குடி பெண்களை திருமணம் செய்து மதம் மாற்றி உள்ளனர். பழங்குடிகளின் நிலங்களைக் கைப்பற்றி பழங்குடி கிராமங்களின் தலைவர்களாக உருமாறி இருக்கின்றனர். பாஜக ஆட்சியில் ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்பட்டு கட்டுப்படுத்தப்படுவர்.
இவ்வாறு அசாம் முதல மைச்சர் ஹிமந்த பிஸ்வா பேசி யுள்ளார்.