நியாயவில்லைக் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையில் ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. அரசின் விதிப்படி 3 மாதம் வரை பொருள் வாங்கவில்லை எனில் குடும்ப அட்டைகள் பயனில் இல்லை எனக் கருதி முடக்கப்படும். அதன்படி, தற்போது நாடு முழுவதும் பல லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் 3 மாதம் வரை பொருள் வாங்காதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவை விரைவில் முடக்கப்படலாம் எனவும் கருதப்படுகிறது.