ஹிந்தி பேசும் மாநிலங்களில் ‘‘ஒரு மொழிக்கொள்கை தான்!’’ ஆளுநருக்கு ப.சிதம்பரம் பதிலடி

viduthalai
2 Min Read

சென்னை, அக்.20- ஒன்றிய மேனாள் நிதியமைச்சரும், காங்கிரசு கட்சி யின் மூத்த தலைவருமாகிய ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியாவின் 28 மாநிலங்களில் 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்
அவர் கற்பனை உலகத்தில் இருக்கிறார் என்று பணிவுடன் சொல்ல விரும்புகிறேன்

ஹிந்தி பேசும் பல மாநிலங்க ளில் -குறிப்பாக பீகார், உத்தரப்பிர தேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் — பல அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை, ஆங்கில வகுப்பு களை நடத்துவதில்லை, அப்படி நடந்தாலும் வகுப்புகளில் மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; பல்லாயிரம் ‘ஆங்கிலம் கற்ற’ மாணாக்கர்கள் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேச அல்லது எழுத இயலாதவர்கள் என்பதை நான் நேரடியாக அறிவேன் அங்கு மும்மொழித் திட்டம் செயல்பாட்டில் இல்லை. ஆழ மாகப் பார்த்தால், அங்கு ‘ஒரு மொழித் திட்டம்’ தான் செயல்ப டுத்தப்படுகிறது

இரண்டாவது மொழி என்ற பெயரில் ஹிந்தி மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ள சமஸ்கிருதம், பஞ்சாபி, போஜ்புரி போன்ற மொழிகள் ஒப்புக்காகக் ‘கற்பிக்கப்படுகிறது’

தென் மாநில மொழிகள் – தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்- 95 சதவீதப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதில்லை,அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப் படவில்லை என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் மாநில அரசுப் பள்ளிகளைத் தவிர தனியார் பள்ளிகள், CBSE, ICSE பள்ளிகள் மற்றும் ஒன்றிய அரசு நடத்தும் KV பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த செய்தி.

தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி யைக் கற்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தடையும் கிடையாது.
‘‘தட்சிண பாரத ஹிந்தி பிரச்சார சபை’’யின் பல நிலைத் தேர்வுகளை ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் பல்லாயிரம் மாணவர்கள் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி.

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

-இவ்வாறு ஒன்றிய மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அப்பதி வில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *