திருவாரூர், அக். 15- திருவாரூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 29.9.2024, மாலை 5.00 மணிக்கு திருவாரூர் திராவிடர் கழக அலுவலகத்தில் மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.
மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, மாவட்ட ப.க தலைவர் அரங்க.ஈவேரா, நகர தலைவர் கே.சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாணவர் கழக தலைவர் கே. அழகேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் தொடக்க உரையாற்றினார். தலைமை ஏற்றிருந்த மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, கழகப் பேச்சாளர் தேவ. நர்மதா ஆகியோர் மாணவர்களிடம் கருத்துரையாற்றினர். மாவட்ட இளைஞரணி தலைவர் கோ. பிளாட்டோ நன்றி உரையாற்றினார்.
மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர் அ.அறிவுச் சுடர் தீர்மானங்களை வாசித்தார்.கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களை திரட்டி கருத்தரங்கங்களை நடத்துவது மற்றும் வாயில் கூட்டங்களை நடத்துவது எனவும், உண்மை இதழுக்கு சந்தாக்களை திரட்டுவது எனவும், பள்ளி கல்லூரி மாணவர்களிடம் துண்டறிக்கை பிரச்சாரம் செய்வது எனவும், தீர்மானிக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களோடு எழுச்சியோடு நடைபெற்ற இக்கூட்டம் இரவு 8.00 மணியளவில் நிறைவடைந்தது.