சென்னை, அக். 11- அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வெகுமதித்தொகை அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். பணியாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்: நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800-அய் வெகுமதித்தொகை ஆக பெறுவர். வெகுமதித்தொகை அறிவிப்பால் 2.75 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.369.65 கோடி கருணைத் தொகையாக தரப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும். போக்குவரத்து, மின்துறையில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வெகுமதித்தொகை வழங்கப்படும். லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வெகுமதித்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வெகுமதித்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வெகுமதித்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பாராட்டத்தக்க நியமனம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக
சட்டக்கல்லூரி முதல்வராக மாற்றுத்திறனாளி பொறுப்பேற்பு
மதுரை,அக்.11– மதுரை அரசு சட்டக் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக முனைவர் பி.குமரன் பணியாற்றி வந்தார். இவரை, மதுரை அரசு சட்டக்கல்லூரியின் முழு நேர முதல்வராக நியமித்து சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் 9.10.2024 அன்று கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளியான முனைவர் குமரன், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சட்டக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்படும் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.