பாலியல் குற்றச்சாட்டு : பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா மீது வழக்குப்பதிவு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெங்களுரு செப் 20 பாலியல் குற்றச்சாட் டின்பேரில் கா்நாடக பாஜக சட்டமன்ற உறுப் பினர் முனிரத்னா மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு மாவட்டம், ராமநகரம் அருகே கக்கலிபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக 40 வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா உள்ளிட்ட 7 போ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

கொலை மிரட்டல், ஜாதியைச் சொல்லி திட்டியது, துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக மாநகராட்சி ஒப்பந்ததாரா் செலுவராஜு அளித்த புகாரின்பேரில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவா் மீது தற்போது பாலியல் துன்புறுத்தல் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் வழக்கில் இடைக்கால பிணை பெற்றுள்ள முனி ரத்னா, பாலியல் வழக்கில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *