ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, செப்.1 ராகுல் காந்தி செப்டம் பரில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்க ளவை எதிர்க்கட்சி தலை வருமான ராகுல் காந்தி 3 நாட்கள் பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டெல்லஸ் நகருக்கு செல்லும் ராகுல் காந்தி டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள், கல்வியாளர்களுடன் கலந் துரையாடுகிறார். அதன்பின்னர், தொழில்நுட்ப வல்லுநர்கள், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உள்பட பல்வேறு தரப்பினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடு கிறார்.

டெக்சாஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி செப்.9ஆம் தேதி வாசிங்டன் செல்கிறார். வாசிங்டனில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். மேலும், தேசிய பத்திரிக்கையாளர் மன்றத்திலும் ராகுல் காந்தி உரையாடுகிறார். செப்.10ஆம் தேதியும் வாசிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற் கும் ராகுல் காந்தி 3 நாட்கள் பயணத்தை முடித் துக்கொண்டு அன்று இரவே இந்தியா திரும்ப உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேகேதாட்டு அணை : ஆணையத்தை அணுக கருநாடகாவை அறிவுறுத்துவதா?
ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் கண்டனம்

சென்னை, செப்.1 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் நேற்று (31.8.2024) கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழ்நாட்டுடன் பேசி அனுமதி பெற்று தர வேண்டும் என்று கருநாடக அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பி வந்தன. இந்நிலையில் ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சகம், மேகேதாட்டு அணை அனுமதி குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும்காவிரி ஒழுங்காற்று குழு முடிவுஎடுக்கும் என்று ஆணையத்திடம் இதை தாக்கல் செய்திட கருநாடக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இது கண்டனத்துக்குரியது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு, அதன் பின் உச்ச நீதிமன்றத்தின்தீர்ப்பு, அதன் மீது காவிரி பயன்பாட்டு மாநிலங்கள் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்து அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எக்காரணம் கொண்டும் காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுக் கூட்டங்களில் மேகேதாட்டு அணை கட்டுமானம் குறித்தான எந்த ஒரு விவாதப் பொருளும் விவாதம் செய்யக் கூடாது. அதற்கான முறையில் தமிழ்நாடு அரசு உடனடியாக ஒன்றிய அரசுக்கு தன்கண்டனத்தை பதிவு செய்திட வேண்டும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *