தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
சென்னை, ஆக.23 பள்ளிக்கல்வித் துறையில் 21.8.2024 அன்று ஒரே நாளில் 57 மாவட்ட கல்வி அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவு:
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு இணையான பணியிடங்களில் பணிபுரிந்து வரும் 57 பேர் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் , மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலர்களிடம் தங்கள் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரிகள் தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள், இடைநிலை என மூன்று பிரிவுகளில் பணியாற்றி வரும் நிலையில்,அவர்களில் தனியார் பள்ளிகள் பிரிவில் பணிபுரியும் மாவட்ட கல்வி அதிகாரிகள்தான் அதிக எண்ணிக்கையில் இடமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.