கீழடி அகழாய்வில்: பாம்பு, விளையாட்டு பொம்மை, இரும்பு ஆணி

1 Min Read

அரசியல்

மதுரை ஆக 10 கீழடி 9ஆம் கட்ட அகழாய்வில், சுடுமண்ணால் செய்யப் பட்ட பாம்பின் தலை கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித் துள்ளார். 

சிவகங்கை மாவட் டம், கீழடியில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 9ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் சுடுமண்ணால் செய் யப்பட்ட பாம்பின் தலை கண்டறியப் பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் ஙீவி19/3 என்ற அகழாய்வுக் குழியில் 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப் பட்ட பானை ஓடுகளை வகைப் படுத்தும் பொழுது, உடைந்த நிலை யில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டது.

கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பின் கண்களும் வாய் பகுதியும் மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது. மேலும் இச்சுடுமண் உருவமானது சொரசொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. மேலும் இச்சுடுமண் உருவம் 6.5 செ.மீ நீளம் 5.4 செ.மீ அகலம் 1.5 செ.மீ தடிமன் கொண்டுள்ளது. இந்த சுடுமண் உருவத்துடன் சுடுமண்ணால் செய் யப்பட்ட பந்து, வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது 

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *