சென்னை, ஆக. 12 – தமிழ்நாடு காவல்துறை சார்பில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வரவேற்றார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக் கப் பிரிவு ஆகியவற்றை இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமலாக்க பணியகம்-குற்றப் புலனாய்வுத் துறை என்ற புதிய துறையை தொடங்கிவைத்தார். பின்னர் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார குறும்படத்தை முதல்-அமைச்சர் வெளியிட்டார்.
இதன்பின்பு போதைப் பொருட் கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை மு.க.ஸ்டாலின் வாசிக்க நிகழ்ச்சி யில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது’போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற அக் கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்த விழிப்புணர்வு திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. இந்த விழிப் புணர்வால் தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது.
போதைப்பொருட்கள் நட மாட்டத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும். போதைப்பழக்கத்தால் சீரழிந்து இருக்கின்ற மாணவர் களையும், இளைஞர்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும் பணியை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
போதைப்பழக்கம் என்பது, அதை பயன்படுத்துகிறவர்கள் மட்டுமில் லாமல், அவர்கள் குடும்பத்தின ருக்கும், சமூகத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒரு கொடிய நோய். தனி மனி தருடைய வாழ்க்கையில் மட்டு மல்ல, மாநில வளர்ச்சியிலும் மிகப் பெரிய பாதிப்பை அது ஏற்படுத் தும்.
போதைப்பொருள் விற்பனை யில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி கள் மற்றும் முக்கிய இடங்களில் கஞ்சா விற்பனை நடந்தால், பொதுமக்களுக்கு தகவல் தெரி விக்க புகார் எண்கள் வெளியிடப் பட்டுள்ளது.
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வழக்குப்பதிவு செய் தல், கைது, போதைப்பொருட்கள் பறிமுதல், சொத்துகள் முடக்கம் என்று பல்வேறு நடவடிக்கைகளை செய்து கொண்டு வருகிறோம். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்ற வாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப் படுகிறது.
கடந்த ஓராண்டில் 154 குற்ற வாளிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து 18 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் 5 ஆயிரத்து 184 வங்கி கணக்குகள் முடக்கப்பட் டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் அழிக்கப் பட்டிருக்கிறது. கஞ்சா சாகுபடி இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை தமிழ்நாடு தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. ஒவ்வொரு காவலரும் தனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற் பனையை முற்றிலுமாக தடை செய்ய உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
கஞ்சா விளைவிப்பதை முற்றி லுமாக தடுத்தாக வேண்டும். போதைப்பொருட்கள் அதிகம் விற்பனையாகின்ற இடங்களை நிரந்தரமாக கண்காணிக்க வேண் டும். பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூ ரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக் கிறது. இது ஆரோக்கியமான மற்றும் பொறுப்புள்ள அடுத்த தலைமுறையை உருவாக்கும்.
அரசு அலுவலர்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் என்று நாம் எல்லோரும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டுக்காக அர்ப் பணிப்புடன் செயல்பட வேண்டும்.
போதை ஒழிப்பை பொறுத்த வரை தடுப்பு நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பிரசாரமும் ஒரு சேர நடக்க வேண்டும். காவல் துறையும், பொதுமக்களும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண் டும். இந்த நேர்கோட்டில் இணைந் தால் போதை இல்லாத தமிழ் நாட்டை நிச்சயம் உருவாக் கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தாயகம் கவி எம்.எல்.ஏ., டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.